Published : 08 Jun 2016 08:12 AM
Last Updated : 08 Jun 2016 08:12 AM

வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கு - கூலிப்படைக்கு ரூ.10 ஆயிரம் முன்பணம்: மனைவி வாக்குமூலம்

சென்னை சூளைமேடு சர்புதீன் தெருவில் வசித்தவர் முருகன்(44). எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறி ஞராக உள்ளார். குடியிருப்பை மாற்றுவதற்காக வாடகை வீட்டை தேடினார். கடந்த 6-ம் தேதி கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 6-வது குறுக்கு தெருவில் உள்ள அஷ்டபதி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை பார்க்க சென்றார். அப்போது 4 பேர் முருகனை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டி கொலை செய்த னர். போலீஸார் நடத்திய விசாரணை யில், மனைவியே கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரிந்தது.

போலீஸார் கூறும்போது, "முருகனும், அவரது மனைவி லோகேஷினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். லோகேஷினி சேத்துப்பட்டில் ஒரு பள்ளியில் ஆசிரியராக இருக் கிறார். பிஎச்.டி.யும் முடித்துள்ளார். லோகேஷினி பிளஸ் 2 படிக்கும் போது சண்முகநாதன் என்பவரை காதலித்திருக்கிறார். சுமார் 6 மாதத்துக்கு முன்பு மீண்டும் சண்முக நாதனின் தொடர்பு கிடைத்துள்ளது. அவரை திருமணம் செய்ய முடிவு செய்த லோகேஷினி, அதற்கு தடை யாக இருக்கும் கணவர் முருகனை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார். இந்த திட்டத்தை சண்முக நாதனிடம் கூற, அவர் வியாசர் பாடியில் இருந்து சுப்பு, சுப்பிரமணி, முரளி, ஜஸ்டின் ஆகிய 4 பேரை அழைத்து வந்துள்ளார்.

இந்த கூலிப் படையினருக்கு ரூ.2 லட்சம் பேசி, ரூ.10 ஆயிரத்தை முன்பணமாக கொடுத்திருக்கிறார் லோகேஷினி. கூலிப்படையினர் முருகனை கொலை செய்ய சூளை மேட்டில் அவரது வீட்டருகே அரிவாளுடன் காத்திருக்க, இதை பார்த்துவிட்ட முருகன் பயந்து, மீண்டும் வீட்டுக்குள் ஓடியிருக்கிறார். மனைவி லோகேஷினியிடம் தன்னை கொலை செய்ய வந்திருப்பவர்கள் குறித்து சொல்லி, போலீஸில் தகவல் சொல்லப்போவதாக கூற, அதை லோகேஷினி தடுத்திருக்கிறார். பின்னர் சண்முகநாதனுக்கு போனில் பேசி கொலை திட்டத்தை சரியாக செய்ய முடியாதா என்று திட்டியிருக்கிறார்.

இதேபோல மேலும் 2 முறை சண்முகநாதனை கூலிப் படையினர் பின்தொடர்ந்து வர, அவர் சுதாரித்துக் கொண்டு தப்பியிருக் கிறார். இந்நிலையில், 4-வது முறையாக கோடம்பாக் கத்தில் வீடு பார்க்க சென்றவரை கூலிப் படையினர் வெட்டிக் கொன்றுள் ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய லோகேஷினி, சுப்பு, சுப்பிரமணி, முரளி ஆகியோரை கைது செய்து விட்டோம். தலைமறைவாக இருக்கும் ஜஸ்டினை தேடி வருகிறோம்" என்றனர்.

தலைமறைவாக இருந்த சண்முகநாதன் நேற்று மாலை யில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x