Published : 11 Oct 2015 10:03 AM
Last Updated : 11 Oct 2015 10:03 AM

மக்களை சந்திக்காதவர்களை பதவியில் இருந்து நீக்க சட்டம்: ஈரோடு சுற்றுப்பயணத்தில் ஸ்டாலின் பேச்சு

‘மக்கள் பிரதிநிதிகள் 15 நாட்க ளுக்கு ஒருமுறை மக்களை சந்திக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும். அப்படி சந்திக்காத வர்களை பதவியில் இருந்து நீக்கப் பட வேண்டும்’ என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில், ‘நமக்கு நாமே’ விடியல் மீட்பு பயணத்தை திமுக பொருளாளர் ஸ்டாலின் நேற்று மேற்கொண்டார். பவானி சாகர் அணையை பார்வையிட்டபின் அங்குள்ள அண்ணாநகர் பனத்தூர் மாரியம்மன் கோயில் முன்பாக கூடியிருந்த மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அங்கி ருந்து சத்தியமங்கலம் மசூதிக்கு வெளியே கூடியிருந்த பொதுமக்களி டம் கலந்துரையாடிவிட்டு, பங்களா புதூர் பகுதியில் உள்ள மஞ்சள் தோட்டத்தில் விவசாயிகளை சந் தித்து ஸ்டாலின் பேசினார்.

தொடர்ந்து கோபியில் மகளிர் சுய உதவிகுழுக்களைச் சேர்ந்த பெண் களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஸ்டாலின், கவுந்தப்பாடியில் நாட்டு சர்க்கரை உற்பத்தியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். முன்ன தாக பல்வேறு நிகழ்ச்சிகளில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘திமுகவை பொறுத்தவரை எந்தெந்த திட்டங்களை செயல்படுத்த முடி யுமோ அவற்றை மட்டும் தேர்தல் அறிக்கையில் வெளியிடுகிறோம். அரசியல்வாதிகள் யாராக இருந் தாலும், பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களை தேடி வர வேண்டும் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதற் காகவே இந்த சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளேன். நான் மட்டுமல்லாது மக்கள் பிரதிநிதிகள் 15 நாட்களுக்கு ஒருமுறை மக்களை சந்திக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும். அப்படி சந்திக்காதவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x