Published : 29 Jun 2017 09:30 AM
Last Updated : 29 Jun 2017 09:30 AM

குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2,065 ஏரிகள் விரைவில் தூர்வாரப்படும்

குடிமராமத்து திட்டத்தின் கீழ் விரைவில் 2,065 ஏரிகள் தூர் வாரப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று பொதுப்பணித் துறை மானி யக் கோரிக்கை மீதான விவா தத்தில் திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசும் போது, குளங்களைத் தூர் வாரும் பணியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டிருப்பது பற்றி குறிப்பிட்டார்.

அப்போது முதல்வர் கே.பழனிசாமி குறுக்கிட்டுப் பேசியதாவது:

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கு வதற்கு 2 மாதங்களுக்கு முன்பே, காஞ்சிபுரம் மாவட்டத் தில் விவசாயிகள் பங்களிப் புடன் குடிமராத்து பணியை அரசு தொடங்கிவைத்தது. முதல்கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு, 1,519 ஏரிகளின் கரைகளை பலப்படுத்துதல், மதகுகளை சீர்செய்தல், தூர்வாருதல் ஆகிய பணிகள் நடந்துவருகின்றன. இதில் சுமார் 80 சதவீத பணிகள் முடிந்துவிட்டன.

விவசாயிகள், பொது மக் கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க் களின் வேண்டுகோளை ஏற்று இத்திட்டம் விரிவுபடுத்தப் பட்டுள்ளது. அதற்காக ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் 2,065 ஏரிகளை தூர்வாரும் பணி மேற் கொள்ளப்படும். பருவமழை யின்போது பெறும் நீரை முழுமையாக குளங்கள், ஏரிகள், அணைகளில் தேக்கி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இத்திட்டம் விவசாயிகள் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரு கிறது.

இவ்வாறு முதல்வர் கே.பழனிசாமி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x