Published : 08 Aug 2016 09:22 AM
Last Updated : 08 Aug 2016 09:22 AM

ஆந்திராவில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழக அரசு சார்பில் 2 வழக்கறிஞர்கள் நியமனம்

ஆந்திராவில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களுக்கு உதவவும், அவர்களை மீட்கவும், தகவல்களை திரட்டும் பணியில் முதல்வரால் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து கடந்த 4-ம் தேதி மாலை கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயிலில் திருப்பதி சென்ற 32 தமிழர்களை, ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் ஆந்திர போலீஸார் கைது செய்தனர்.

அவர்கள் அனைவரும் செம்மரம் கடத்துவதற்காக வந்ததாக சந்தேகத் தின் பேரில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கோடரி, கத்தி, அரிசி ஆகியவை கைப்பற்றப் பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, அவர்கள் மீது வன கடத்தல் சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ள ஆந்திர போலீஸார், திருப்பதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா, நேற்று முன்தினம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதினார். அதில், 32 பேரையும் மீட்க, ஆந்திர அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள தமிழகத்தில் இருந்து அரசு வழக்கறிஞர்கள் இருவரை அனுப்புவதாகவும் கூறியிருந்தார்.

இதையடுத்து, கடந்த முறை செம்மரக் கடத்தல் வழக்கில் கைதான 188 தமிழர்களை மீட்டு வந்த அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் முகமது ரியாஸ் மற்றும் அருள் ஆகியோரை இந்த வழக்கிலும் நியமித்து முதல்வர் உத்தரவிட்டார்.

முதல்வர் உத்தரவைத் தொடர்ந்து, இருவரும் இன்று ஆந்திரா செல்கின்றனர். மேலும், வழக்கு தொடர்பான பல்வேறு ஆவணங்களை தயாரிக்கும் பணியை நேற்றே அவர்கள் தொடங்கிவிட்டனர்.

இது தொடர்பாக வழக்கறிஞர் கள் தரப்பில் கூறியதாவது:

கடந்த முறை வழக்கில் ஆஜ ராகி தமிழர்களை மீட்ட அனுபவம் இருப்பதால், இந்த பணியை முதல் வர் அவர்களுக்கு அளித்துள்ளார். அவர்கள் ஆந்திரா சென்றதும், முதலில் கைது செய்யப்பட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள், அவற்றின் பிரிவுகள், அவற்றின் தன்மை குறித்த தகவல்களை முழுமையாக சேகரிப்பார்கள். சிறையில் இருக்கும் தமிழர்களை சந்தித்து நடந்த விவரங்களையும், தகவல்களையும் பெறுவார்கள். அதன்பின், நீதிமன்றத்தில் வழக்கை நடத்துவதற்கான பணிகளை மேற் கொள்வர். இதற்கு குறைந்தபட்சம் 3 நாட்கள் ஆகும். அடுத்ததாக நீதிமன்றத்தில் வழக்கு வந்ததும், வாதப்பணிகளை மேற்கொள்வர். ஆந்திராவில் ஏற்கெனவே நமது வழக்கறிஞர்களுக்கு உதவிய வழக்கறிஞர்களும் இதில் இணைந்து பணியாற்றுவார்கள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x