Published : 15 Jun 2017 09:16 AM
Last Updated : 15 Jun 2017 09:16 AM

தொலைதூர கிராமங்களில் சூரிய சக்தி மூலம் குடிநீர் விநியோகிக்கும் திட்டம் விரிவாக்கம்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவிப்பு

தருமபுரி, கிருஷ்ணகிரியில் உள்ள தொலை தூர கிராமங்களில் சூரிய சக்தி மூலம் தொட்டிகளில் நீர் நிரப்பி குடிநீர் விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. இதில், சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப் பணன் தன் பதிலுரையில் கூறிய தாவது:

தமிழகத்தில் கடந்த மே மாதம் வரை 2 ஆயிரத்து 855 தொழிற் சாலைகளை நிறுவவும், 11 ஆயி ரத்து 781 தொழிற்சாலைகளை இயக்கவும் இணையவழி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, தேசிய பசுமைப்படை சூழல் மன்ற மாணவ, மாணவியருக்கு சூழல் போட்டிகள், சுற்றுலாவுக்கு மாவட்டத்துக்கு ரூ.2 லட்சம் என 32 மாவட்டங்களுக்கு ரூ.64 லட்சம் வழங்கப்படும்.

தமிழகத்தின் 32 மாவட்டங்களி லும் தேர்வு செய்யப்பட்ட 960 பள்ளி களின் தேசிய பசுமைப்படை மற்றும் சூழல் மன்ற மாணவர் களின் ஈடுபாட்டுடன், பள்ளிகளில் தலா ரூ.15 ஆயிரம் செலவில் மரக் கன்றுகள் நட்டு பராமரிக்கப் படும்.

சுற்றுச்சூழல் மேம்பாட்டில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங் களுக்கு நடப்பு ஆண்டு முதல் ரூ.2 லட்சம் செலவில் பசுமை விருதுகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து வனத்துறை அமைச் சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பதிலுரையில் பேசியதாவது:

தமிழகத்தில் வன உயிரின பாது காப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டதால் கடந்த 2011-ல் 163 ஆக இருந்த புலிகள் எண்ணிக்கை 2014-ல் 229 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் பல்வேறு மரம் நடும் திட்டங்களால், வனப்பரப்பு 2 ஆயிரத்து 501 சதுர கி.மீ. அளவுக்கு அதிகரித்துள்ளது. வார்தா புயலுக் குப்பின் பசுமை போர்வையை மீட்கும் விதமாக, ரூ.13 கோடியே 42 லட்சத்தில் செயல்படுத்தப்படும் திட்டத்தில் தற்போது மரக்கன்றுகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இவை மழை காலத்தில் நடப்படும்.

இந்த ஆண்டு, வன உயிரினங்கள் காட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க, மழைநீரை சேகரிக்க காப் புக் காடுகளில் 60 பண்ணைக்குட்டை கள் ரூ.3 கோடியில் அமைக்கப்படும். வனத்துறையில் பணியாற்றும் விளையாட்டு வீரர்களுக்காக உள் விளையாட்டரங்கம், உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்படும். பெயர்த் தெடுத்த மரங்களை மாற்று இடங் களில் நடவு செய்யும் கருவிகள் ரூ.1 கோடியில் வாங்கப்படும்.

கோட்டூர்மலை, ஏரிமலை, ஆலக்கட்டு, பண்ணைப்பட்டி, ஏரியூர், குண்டக்கரை ஆகிய தொலைதூர கிராமப் பகுதிகளில் ஒரு வசிப்பிடத்துக்கு தலா ரூ.13 லட்சம் செலவில் சூரிய மின்சக்தி மூலம் தொட்டிகளில் நீர் நிரப்பி குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

திண்டுக்கல்லில் அமைந்துள்ள மலையை பசுமை மிக்கதாக மாற்றும் திட்டம் ரூ.50 லட்சத்திலும், பழனியில் மருத்துவ மரங்கள் கொண்ட பூங்கா அமைக்கும் திட்டம் ரூ.30 லட்சத்திலும் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வரை புகழும் அமைச்சர்கள்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது சட்டப்பேரவையில், முதலில் அவரை புகழ்ந்த பின்புதான் துறை தொடர்பாக அமைச்சர்கள் பேசத் தொடங்குவார்கள். தற்போது அமைச்சர்கள் முதலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அதன்பின் தற்போதைய முதல்வர் கே.பழனிசாமியை புகழ்ந்த பிறகு துறை தொடர்பான பதிலுரை அளிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x