Published : 26 Jun 2016 10:40 AM
Last Updated : 26 Jun 2016 10:40 AM

அரசு - தனியார் பங்களிப்புடன் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி: நெடுஞ்சாலைத்துறை கூடுதல் தலைமைச் செயலர் தகவல்

அரசு - தனியார் பங்களிப்புடன் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்று அரசு நெடுஞ் சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

அசோசெம் நிறுவனம் சார்பில் ‘ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்து முனையமாக தமிழகம்’ என்ற தலைப்பில் கப்பல் சரக்கு போக்குவரத்து குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற் றது. இதில் அரசு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் பங்கேற்று, கருத்தரங்க மலரை வெளியிட, சென்னை துறைமுக தலைவர் சிரில் ஜார்ஜ் பெற்றுக்கொண்டார்.

பின்னர் கூடுதல் தலைமைச் செய லர் ராஜீவ் ரஞ்சன் பேசியதாவது: இந்தியா 7 ஆயிரத்து 500 கி.மீ நீள கடல் வழியைக் கொண்டது. கடல் வழி வாணிபத்தில் பண்டைய காலத் தில் தமிழகம் சிறந்து விளங்கியது. 1800-ம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவும், சீனாவும் கடல்சார் வாணிபத்தில் 50 சதவீத பங் களிப்பை செலுத்தியுள்ளன. பின்னர் அந்த இடத்தை ஐரோப்பிய நாடு களும், அதனைத் தொடர்ந்து அமெரிக்காவும் தக்கவைத்துக் கொண்டன. கடந்த 4 ஆண்டுகளாக, கடல்சார் வாணிபத்தில் மீண்டும் இந்தியா எழுச்சி பெற்று வருகிறது. இந்த வாய்ப்பை தொழில் துறையினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் இந்தியாவில் உள்ள துறைமுகங்களின் சரக்குகளை கையாளும் திறனை அதிகரிக்க வேண்டும். சரக்குகளை கையாள் வதற்கான கட்டணத்தை குறைத் துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட பகுதியிலிருந்து துறைமுகத்துக்கு உற்பத்திப் பொருட்களை கொண்டு வர ஆகும் நேரத்தை குறைக்க வேண்டும்.

தமிழக அரசின் ‘தொலைநோக்கு திட்டம் 2023’ன் படி பல்வேறு நீண்டகால சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களை மேற்கொள்வதில் அரசு - தனியார் பங்களிப்பு திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இத்திட்டத்தின் முன் னோடியாக தமிழகம் திகழ்கிறது. இத்திட்டத்தின்படி பல ஆண்டு களுக்கு முன்பே கிழக்கு கடற்கரை சாலையை அமைத்தோம். இதன் நீட்டிப்புப் பணிகள் 80 சதவீதம் வரை நிறைவு பெற்றுள்ளன என்றார்.

மாநாட்டில், அசோசெம் கப்பல் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து மன்றத் தலைவர் எம்.எஸ்.அருண், தென்மண்டல மேம்பாட்டுக் குழு தலைவர் வினோத் சுரானா, இந்திய சரக்கு போக்குவரத்து கல்வி நிறுவன இயக்குநர் வி.ஜெ.புஷ்பகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x