Published : 22 Sep 2016 08:12 AM
Last Updated : 22 Sep 2016 08:12 AM

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் காவிரி பிரச்சினை தீர்வை நோக்கி நகர்கிறது: மன்னார்குடி ரெங்கநாதன் சிறப்புப் பேட்டி

காவிரி மேலாண்மை வாரியம், நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழுவின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மன்னார்குடி ரெங்கநாதன், ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

காவிரி மேலாண்மை வாரியத்தில், ஒழுங்காற்றுக் குழுவில் இடம்பெறும் அதிகாரிகள் யார்?

மத்திய அரசு தலைமைப் பொறியாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி தலைவராகவும். 2 பேர் இயக்குநர்களாகவும் செயல்படுவர். தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங் களைச் சேர்ந்த 4 பிரதிநிதிகள் இடம்பெறுவர். காவிரி நீர்ப்பிடிப் புப் பகுதி சம்பந்தப்படாத பொறி யாளர் ஒருவர் இந்த அமைப்பின் செயலாளராக பணியாற்றுவார்.

காவிரி மேலாண்மை வாரியமே ஒழுங்காற்றுக் குழுவையும் நியமித் துக்கொள்ளும். அந்த குழுவின் தலைவராக தலைமைக் கண் காணிப்புப் பொறியாளர் அந்தஸ் துள்ள அதிகாரி ஒருவரும், மத்திய அரசு நீர்வள ஆதாரத்துறை சார்பில் தண்ணீர் கணக்கீடு மற்றும் பாசனங்கள் தொடர்புடைய பொறியாளர்கள் 2 பேர், மத்திய வேளாண்மைத் துறை அதிகாரி ஒருவர், 4 மாநிலங்களைச் சேர்ந்த பொறியாளர்களையும் சேர்த்து 8 பேர் இடம்பெறுவர். காவிரி மேலாண்மை வாரியத்தின் செய லாளரும் இந்த அமைப்பில் உறுப் பினராக பணியாற்றுவார்.

காவிரி தொடர்பான அணைகளின் பராமரிப்பு வருங்காலத்தில் யாரால் மேற்கொள்ளப்படும்?

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீர் பங்கீட்டுக் குழுவை அமைக்க ஆகும் செலவினங்கள் அனைத்தையும் 4 மாநிலங்களுமே பகிர்ந்துகொள்ளும். அணை பராமரிப்பு செலவினங்களை சம்பந்தப்பட்ட மாநிலங்களே செய்துகொள்ள வேண்டும்.

ஹேமாவதி, ஹேரங்கி, கிருஷ்ணராஜசாகர், கபினி, மேட்டூர், பவானிசாகர், அமராவதி பானாசுரநகர் அணைகள் இந்த அமைப்பின் முழு கட்டுப்பாட்டில் சென்றுவிடும். அணைகளின் நீர் இருப்பு, வெளியேற்றம் போன்ற முடிவுகளை நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் மேற்கொள்வார்கள்.

இந்த உத்தரவின் மூலம் தமிழக விவசாயிகளுக்குத் தீர்வு கிடைத்து விட்டது என நம்பலாமா?

இருக்கின்ற தண்ணீரைப் பகிர் வதில் மத்திய, மாநில அரசுகளின் தலையீடு இன்றி இந்த அமைப்பே தன்னாட்சி அதிகாரமாக செயல் படத் தொடங்கிவிட்டால் தமிழக காவிரிப் பாசன விவசாயிகள் பழைய நிலையில் குறுவை தொடங்கி, சம்பா சாகுபடியை முறையாக செய்யும் நிலை வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்த ரவைப் பெற முயற்சித்தவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

உச்ச நீதிமன்றத்தின் தற் போதைய உத்தரவு, காவிரிப் பிரச்சினையைத் தீர்வை நோக்கி நகர்த்தப்பட்டு உள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க உத்த ரவைப் பெற வழக்கு தொடர்ந்த தமிழக அரசு, போராடிய விவசாயிகள், தமிழக அரசியல் கட்சிகளுக்கு என் நன்றிகள். இந்தச் சூழலில் துரதிர்ஷ்டவசமாக காவிரிக்காக உயிர் நீத்த மன்னார்குடி விக்னேஷின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x