Published : 11 Jul 2016 02:06 PM
Last Updated : 11 Jul 2016 02:06 PM

திண்டுக்கல்லில் எம்ஜிஆருக்கு மணிமண்டபம்: எம்ஜிஆர் பக்தர்கள் குழு, அறக்கட்டளை முடிவு

எம்ஜிஆரின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு, திண்டுக்கல்லில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என, திண்டுக்கல் மாவட்ட மனிதநேய மாணிக்கம் மக்கள் திலகம் எம்ஜிஆர் பக்தர்கள் குழு மற்றும் அறக்கட்டளை சார்பில் முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து எம்ஜிஆர் பக்தர்கள் குழு மாவட்டச் செயலாளர் மற்றும் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ப. மலரவன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

‘மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். 100’ என்ற தலைப்பில் 100 நாட்கள் தொடர்ந்து கட்டுரை வெளியிட்டு அவரது புகழுக்கு மேலும் புகழ் சேர்த்த ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். விவரம் தெரிந்த நாளில் இருந்தே, நான் எம்ஜிஆர் ரசிகன். அரசியலுக்கும், இந்த அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரசியல் சார்பற்ற இதன் கிளை அமைப்புகள் மதுரை, திருச்சி, சென்னை, புதுடில்லி ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது. ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதில் உறுப் பினர்களாக உள்ளனர். எம்ஜிஆர் பிறந்தநாள் அன்று ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம். இந்த ஆண்டு எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா வை முன்னிட்டு, அவருக்கு மணிமண்டபம் கட்ட முடிவு செய்துள்ளோம். இதற்காக இடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். முதலில் இடம் வாங்கிவிட்டு, பின்னர் நன்கொடை வசூலித்து மணிமண்டபம் கட்டப்படும்.

எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து முதன்முதலாக வெற்றிபெற்ற தொகுதி என்பதால் திண்டுக் கல்லில் மணிமண்டபம் கட்டு கிறோம். திண்டுக்கல்லில் எம்ஜி ஆருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என, எங்கள் அமைப்பு சார்பில் தமிழக முதல்வருக்கு பலமுறை கடிதம் எழுதிவிட்டோம். எந்த பதிலும் இல்லை. இனி அரசை எதிர்பார்த்து பலன் இல்லை என்பதால், எம்ஜிஆர் பக்தர்கள் குழு, அறக்கட்டளை சார்பில் மணிமண்டபம் கட்ட ஏற்பாடுகளைத் தொடங்கி உள் ளோம். மக்களிடம் நிதி திரட்டுவது பெரிய பிரச்சினை இல்லை. ஆனால், மணி மண்டபத்தை ஆக்கப் பூர்வமாக செயல்படுத்தி காட்டவேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x