Published : 26 Feb 2017 09:57 AM
Last Updated : 26 Feb 2017 09:57 AM

தமிழக அரசின் சட்டவிரோதச் செயல்களை ஆளுநர் தடுத்து நிறுத்த வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை

தமிழக அரசின் சட்டவிரோதச் செயல்களை ஆளுநர் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும், சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ, 10 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

ஜெயலலிதா மறைந்தாலும் இந்த வழக்கில் அவரே முதல் குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமை யிலான அரசு ஜெயலலிதாவின் பிறந்த நாளை 69 லட்சம் மரக்கன்றுகள் நடுதல், 690 சிறப்பு மருத்துவ முகாம்கள் என அரசு விழாவாகக் கொண்டாடியுள்ளது. இதில் தலைமைச் செயலாளர், அரசுத் துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டிருப்பது சட்டவிரோதச் செயலாகும்.

அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாடப்படுவதை யாரும் விமர்சிக்கப் போவ தில்லை. அதிமுக தலைமை அலு வலகத்தில் 10 நிமிடங்களில் நடத்தி முடிக்கப்பட்ட பிறந்த நாள் விழா, அரசு சார்பில் பல லட்சம் செலவில் நடத்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

உச்ச நீதிமன்றத்தால் குற்ற வாளி என அறிவிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் படம் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ளது. இது சட்டத்துக்கு எதிரானதாகும். எனவே, ஆளுநர் இதில் தலையிட்டு தமிழக அரசின் சட்டவிரோதச் செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x