Published : 25 May 2017 03:50 PM
Last Updated : 25 May 2017 03:50 PM

பாலில் ரசாயனம் கலக்கப்படுவதில்லை: ஆரோக்யா நிறுவனம் விளக்கம்

ஆரோக்யா பாலில் எந்த வித ரசாயனமும் கலக்கப்படுவதில்லை என்று ஆரோக்கியா பால் நிறுவனத்தின் தலைவர் சந்திரமோகன் கூறியுள்ளார்.

முன்னதாக, பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ''தனியார் பால் நிறுவனங்கள் பாலில் ரசாயனம் கலக்கின்றன. இதனால் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உருவாகிறது. பால் கெடாமல் இருக்க ரசாயனங்களை கலப்பதாக வந்த புகாரை அடுத்து தமிழக அரசு சார்பில் 4 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாலில் கலப்படம் செய்யும் தனியார் பால் நிறுவனங்கள் மூடப்படும்'' என்று எச்சரிக்கை விடுத்தார்ர்.

இந்நிலையில் ஆரோக்யா பாலில் எந்தவித ரசாயனமும் கலக்கப்படுவதில்லை என்று அந்நிறுவனத்தின் தலைவர் சந்திரமோகன் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், ''ஆரோக்யா பாலில் எந்த வித ரசாயனமும் கலக்கப்படுவதில்லை. தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக ஆதாரமற்ற தகவல்கள் பரப்பப்படுகின்றன.

ஆரோக்யா நிறுவனம் விவசாயிகளிடம் இருந்து மட்டுமே பால் கொள்முதல் செய்கிறது. இடைத்தரகர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்படுவதில்லை. நாட்டின் மிகச் சிறந்த தனியார் பால் நிறுவனங்களில் ஆரோக்யாவும் ஒன்று. அமைச்சர் மீது எந்தக் குறையையும் சொல்ல விரும்பவில்லை'' என்றார் சந்திரமோகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x