Published : 14 Feb 2017 08:37 AM
Last Updated : 14 Feb 2017 08:37 AM

உயர் நீதிமன்றத்தில் காஞ்சிபுரம் எஸ்பி பதில் மனு: எம்எல்ஏக்கள் யாரும் சட்டவிரோத காவலில் இல்லை - ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு

குன்னம் தொகுதி எம்எல்ஏ ஆர்.டி. ராமச்சந்திரன், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா ஆகியோரைக் காணவில்லை எனவும், அவர் களைக் கண்டுபிடித்து ஆஜர்படுத் தக் கோரியும் வழக்கறிஞர் இளவரசன் மற்றும் வழக்கறிஞர் ப்ரீத்தா ஆகியோர் தனித்தனியாக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் மற்றும் காஞ்சி புரம் மாவட்ட எஸ்பி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி கள் எம்.ஜெயச்சந்திரன், டி.மதி வாணன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று நடந்தது.

அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ராஜர த்தினம் ஆஜராகி, காஞ்சிபுரம் எஸ்பி ஜெ.முத்தரசி சார்பில் பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில் ‘கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட் மற்றும் பூந்தண்டலம் வில்லேஜ் ரீட்ரீட் ரிசார்ட் ஆகியவற்றில் எம்எல்ஏக்கள் தங்கியிருப்பது குறித்து விசாரணை செய்ய குழுக் கள் அமைக்கப்பட்டது. கடந்த பிப்.11-ம் தேதி கூவத்தூர் ரிசார்ட் டில் 100 எம்எல்ஏக்களிடமும், பூந்தண் டலம் ரிசார்ட்டில் 19 எம்எல்ஏக் களிடம் விசாரணை நடத்தப்பட்டது. எம்எல்ஏக்கள் யாரும் சட்டவிரோதக் காவலில் இல்லை. அவர்கள் தங் களின் சுயவிருப்பத்தின்பேரில் சுதந்திரமாக அங்கு பல்வேறு கார ணங்களுக்காக தங்கியிருப்பதாக தெரிவித்தனர். குறிப்பாக குன்னம் ஆர்.டி.ராமச்சந்திரன், கிருஷ்ண ராயபுரம் கீதா உட்பட 119 எம்எல்ஏக்களிடமும் தனித்தனியாக எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெற்றுள்ளோம். அந்த வாக்கு மூலத்தை சீலிட்ட கவரில் தாக்கல் செய்கிறோம். எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் சொந்த விருப் பத்தின் பேரில் அங்கு தங்கியிருப் பதால் அவர்களை மீட்க வேண்டிய கட்டாயம் எழவில்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண் டும்’ என கோரப்பட்டு இருந்தது.

அப்போது நீதிபதிகள், ‘‘எம்எல்ஏக்களின் குடும்ப உறுப் பினர்களோ அல்லது உறவினர் களோ இந்த வழக்கை ஏன் தாக்கல் செய்யவில்லை’’ என கேட்டனர். அதற்கு வழக்கறிஞர் ப்ரீத்தா, ‘‘நான் உறவினர் என்ற அடிப்படையில்தான் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளேன். எம்எல்ஏக் கள் சிலருக்கு உடல்நலம் சரி யில்லை. அவர்களுக்கு அங்கு மருத் துவ வசதிகள் இல்லை’’ என்றார்.

வழக்கறிஞர் கே.பாலு, ‘‘கூவத் தூர் ரிசார்ட்டில் குண்டர்கள் நிறுத் தப்பட்டுள்ளனர். செய்தி சேகரிக்கச் செல்லும் செய்தியாளர்களைக்கூட அடித்து விரட்டுகின்றனர். பொது மக்கள் அந்த பகுதியில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. போலீஸாரும் நேற்று முன்தினம் தான் அந்த விடுதிக்குள் அனுமதிக் கப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் அரசு தரப்பு முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தந்து கொண்டிருக்கிறது. சென்னையில் குண்டர்களை கைது செய்யும் போலீஸார், எம்எல்ஏ சண்முகநாதன் புகார் கொடுத்தும் கூவத்தூரில் உள்ள அடியாட்களை இதுவரை கைது செய்யவில்லை. எனவே போலீஸ் ஆணையர் அல்லது கூடுதல் ஆணையரையோ, நீதி மன்றத்தின் சார்பில் ஒரு வழக்கறிஞர் ஆணையரையோ நியமித்து உண்மை நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்’’ என்றார்.

‘‘இந்த வழக்கில் நாங்கள் ஆளு நர்போல செயல்பட்டு எம்எல்ஏக் களை அணிவகுப்பு நடத்தச் சொல்ல முடியாது’’ என கருத்து தெரிவித்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x