Last Updated : 05 Sep, 2014 09:21 AM

 

Published : 05 Sep 2014 09:21 AM
Last Updated : 05 Sep 2014 09:21 AM

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் உத்தரவு 100 நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்குமா?

ஊரக வேலைத் திட்டத்தில் 50 சதவீதப் பணிகள் நீர்நிலைப் பாதுகாப்புக்கான பணிகளாக இருப்பது கட்டாயம் என்ற மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் புதிய உத்தரவு நாடு முழுவதும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2006-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண் டுக்கு 100 நாள் வேலை என்ற இந்த திட்டம், வேலையில்லா கிராமப்புற மக்களுக்கு வாழ்வா தாரம் அளிக்கும் திட்டமாக கருதப்படுகிறது.

இந்நிலையில், ‘ஊரக வேலைத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளில் 50 சதவீதப் பணிகள் நீர்நிலைப் பாதுகாப்புக்கான பணிகளாக கட்டாயம் இருக்க வேண்டும்’ என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். வறட்சியின் பாதிப்பிலிருந்து நாட்டை பாதுகாக்கவும், நீர்நிலைகளை மேம்படுத்த வும் இந்த உத்தரவைப் பிறப்பித் துள்ளதாகக் கட்கரி கூறுகிறார்.

ஆனால், இந்த உத்தரவை அமல்படுத்தினால் 100 நாள் வேலைத் திட்டமே சீர்குலைந்து விடும் என்கிறார் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா.

அவர் கூறும்போது, ‘‘ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தங்கள் கிராம பஞ்சாயத்தில் என்னென்ன பணிகள் செய்வது என்பதை அந்தந்த கிராம சபைகள்தான் முடிவு செய்ய வேண்டும். இது கிராம சபைகளுக்கு அளிக்கப்பட்ட சட்டரீதியான அதிகாரம். அந்த அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் அறிவிப்பு உள்ளது. இதுபோன்ற மாற்றங்களை நாடாளுமன்றம் மூலம்தான் செய்ய வேண்டுமே தவிர, அமைச்சரின் தன்னிச்சையான உத்தரவால் செய்வது சரியல்ல’’ என்றார்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.திருநாவுக்கரசு கூறும்போது, “100 நாள் வேலை அளிக்க வேண்டும் என்று சட்டத்தில் இருந்தாலும் தேசிய சராசரியாக ஆண்டுக்கு 44 நாள் மட்டுமே வேலை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் சராசரி வேலை நாள் 50 மட்டுமே. அதிலும் பல முறைகேடுகள் நடக்கின்றன. 40 பேர் வேலை செய்தால் 200 பேர் செய்ததாக கணக்குக் காட்டி பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். இரவு நேரங்களில் இயந்திரங்கள் மூலம் வேலையை செய்துவிட்டு, தொழிலாளர்களை வைத்து செய்ததாகக் கூறி முறைகேடு செய்கின்றனர். இதுபோன்ற முறைகேடுகளை களைந்து, திட்டத்தை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் நிலவும்போது, 50 சதவீதப் பணிகள் நீர்நிலை பாதுகாப்புப் பணிகளாக இருக்க வேண்டும் என்று கூறுவது திட்டத்தையே முழுமையாக முடக்கிவிடும் என்றார். நாடு முழுவதும் நீர்நிலைகள் அழிந்து வரும் நிலையில் அமைச்சரின் இந்த அறிவிப்பு வரவேற்க வேண்டிய ஒன்று என்கிறார் பெண்கள் இணைப்புக் குழுவின் தலைவரான ஷீலு. அவர் கூறியதாவது:

அமைச்சரின் உத்தரவு, வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங் களுக்கு மட்டும்தான் பொருந்தும். மற்ற பகுதி தொழிலாளர்களுக்கு பாதிப்பு வராது. 100 நாள் வேலைத் திட்டத்தால் விவசாயமே அழிந்து வருவதாக ஒரு பொய்ப் பிரச்சாரம் நடக்கிறது.

விவசாயப் பணிகளுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பது உண்மைதான். இந்தப் பிரச்சினையை 100 நாள் வேலைத் திட்டத்தாலேயே தீர்க்க முடியும். விவசாயப் பணிகள் உள்ள நாட்களில் கிராமங்களில் வேறு பணிகளை செய்யக் கூடாது. ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு நாளில் எத்தனை தொழிலாளர்கள் தேவை என்பதை கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் முன்பே பதிவு செய்ய வேண்டும். அதற்கேற்ப 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களை பிரித்து விவசாயிகளின் வயல்களுக்கு அனுப்பலாம். அவர்களுக்கான கூலியில் விவசாயி பாதியும், திட்ட நிதியிலிருந்து பாதியும் வழங்கலாம். நீர்நிலைப் பாது காப்பு பணிகளோடு சேர்ந்து, இது தொடர்பாகவும் உரிய மாற்றங் களை திட்டத்தில் ஏற்படுத்த வேண்டும் என்றார் ஷீலு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x