Published : 04 Aug 2016 08:11 AM
Last Updated : 04 Aug 2016 08:11 AM

பேரழிவை ஏற்படுத்தும் அனல்மின் திட்டங்கள் தமிழகத்துக்கு தேவையில்லை: மின் பகுப்பாய்வு நிறுவன நிதி ஆலோசகர் தகவல்

பேரழிவை ஏற்படுத்தும் அனல்மின் திட்டங்கள் தமிழகத்துக்கு தேவையில்லை என்று மின் பொருளாதாரம் மற்றும் நிதி பகுப்பாய்வு நிறுவன (ஐஇஇஎஃப்ஏ) நிதி ஆலோசகர் ஜெய் ஷார்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் நேற்று, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தின் மின் திட்டங்கள், மாநில மின் உற்பத்தி மற்றும் பயன்பாடு குறித்து எங்கள் அமைப்பு சார்பில் ஒரு பகுப் பாய்வை நடத்தியிருக்கிறோம். அதன்படி, தமிழகத்தில் தினமும் 15 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் படுகிறது. இதில் அதிகபட்சமாக 14 ஆயிரத்து 800 மெகாவாட் மின்சாரம் தான் பயன்படுத் தப்படுகிறது.

மின் பரிமாற்றத்தின்போது 24.4 சதவீதம் அளவிலான மின்சாரம் கசிந்து இழப்பு ஏற்படுகிறது. ஜெர்மனியில் இந்த இழப்பு 5 சத வீதமாக உள்ளது. மேலும் தமிழகத் திலுள்ள அனைத்து அனல் மின் நிலையங்களும், அதன் முழு திறனில் 58 சதவீதம் அளவுக்கு மட்டுமே செயல்படுகின்றன. ஏற்கெனவே மின் வாரியத்தின் கடன் ஆண்டுக்கு 12 சதவீதம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், நிலக்கரி மூலம் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் செய்யூர் அனல் மின்திட்டத்தை ரூ.27 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், ஒரு யூனிட் ரூ.5.93 ஆக இருக்கும் என விலை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற அனல்மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத் தின் விலையை விட, இது மிக அதிகம். இது நுகர்வோரையும், வரி செலுத்தும் மக்களையும் பாதிப்புக்குள்ளாக்கும். மேலும் அனல்மின் திட்டத்தால் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதனால், தமிழக அரசு, தமிழகத் துக்கு பேரழிவை ஏற்படுத்தும் மெகா அனல்மின் திட்டங்களை செயல்படுத்த தேவையில்லை. அந்த நிதியைக் கொண்டு, மின் பரிமாற்ற இழப்பை குறைப்ப தற்கான கட்டமைப்புகளை மேம் படுத்தலாம்.

அனைத்து அனல்மின் நிலையங்களிலும் முழு உற்பத்தி திறனை எட்டுவதற்கான கட்ட மைப்புகளை மேம்படுத்தலாம். இதன் மூலம் கிடைக்கும் அதிகப்படியான மின்சாரத்தைக் கொண்டு, தமிழகத்தின் வருங்கால மின்தேவையை சமாளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை ஆதரவு குழுவைச் சேர்ந்த நித்தியானந்த் ஜெயராமன் உடனிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x