Published : 29 Nov 2013 12:15 PM
Last Updated : 29 Nov 2013 12:15 PM

மழைக்கு பலியானவர்கள் குடும்பங்களுக்கு முதல்வர் நிதியுதவி

தமிழகத்தில் அண்மையில் பெய்த கனமழைக்கு பலியான 10 பேர் குடும்பங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்:

31.10.2013 அன்று விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மின்சாரம் தாக்கியும். 1.11.2013 அன்று மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், இரும்பாடி கிராமத்தைச் சேர்ந்த சங்கையா மனைவி தில்லையம்மாள்; 4.11.2013 அன்று விழுப்புரம் மாவட்டம், நவமால் காப்பேர் கிராமத்தைச் சேர்ந்த மதிவாணன் மகன் நாகேஸ்வரன்; நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், சித்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த சக்கரபாணி மனைவி பானுமதி; திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், நத்தம் கிராம உட்கடை காந்தி நகரைச் சேர்ந்த பெரியக்காள்; திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் பெரியண்ணன் ஆகியோர் இடி, மின்னல் தாக்கியும் உயிரிழந்தனர்.

10.11.2013 அன்று கடலூர் மாவட்டம், சான்றோர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி சாந்தி ; 16.11.2013 அன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மனைவி விஜி, விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், புக்கிரவாரி கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சுனன் மனைவி அய்யம்மாள் ஆகியோர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர்.

16.11.2013 அன்று விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம் கிராமத்தைச் சேர்ந்த அரிராமர் மகன் சதீஷ்குமார் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் உயிரிழந்தார்.

இந்த சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x