Published : 12 Jan 2017 09:58 AM
Last Updated : 12 Jan 2017 09:58 AM

ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம்: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வசதியாக மத்திய அரசு உடனடியாக அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை இந்த ஆண்டாவது நடத்த வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்தச் சிக்கலில் இந்த ஆண்டும் தமிழ கத்தை மத்திய அரசு கைவிட்டு விட்டதாகவே தோன்றுகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக அவசரச் சட்டம் பிறப்பிக்க முன்வராத மத்திய அரசு, தமிழக மக்களுக்கு தவறான நம்பிக்கையை அளித்து, அவர்களின் போராட்டத்தை முனைமழுங்கச் செய்ய முயல்வது கண்டிக்கத்தக்கது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி கடந்த 2 ஆண்டுகளாக தமிழக மக்களை ஏமாற்றி வந்த மத்திய, மாநில அரசுகள், இந்த ஆண்டு கண்டிப்பாக நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்து வந்தன. ஆனால், அதற்கான எந்த ஏற்பாட்டையும் அரசுகள் செய்யவில்லை.

கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப் படாததால் கடும் ஏமாற்றமடைந்த இளைஞர்கள், இம்முறை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர்.

எந்தவொரு அறிவிப்பும் இல்லா மல் சென்னை கடற்கரையிலும், மதுரையிலும் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு ஆதரவு பேரணியில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்றதும், தமிழகத்தில் பெரும் பாலான அரசு கல்லூரிகளின் மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு பேரணியாகச் சென்றதும் இந்த உணர்வையே பிரதிபலிக்கின்றன.

இவ்வாறு அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

அன்புமணி வேண்டுகோள்

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியதாவது:

வறட்சி பாதித்த மாநிலமாக தமிழகத்தை மத்திய அரசு அறிவித்து, நிவாரணமாக குறைந்தது ரூ.5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணமும், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணமும் வழங்க வேண்டும். விவசாயிகளின் வங்கிக் கடன்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். பிரதமர் மோடி தமிழகம் வந்து வறட்சி பாதிப்பை பார்வையிட வேண்டும்.

சென்னை ஸ்தம்பிக்கும்

வறட்சியால் 17 விவசாயிகள் இறந்ததாக பொய்யான தகவலை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இதைக் கண்டிக் கிறோம். அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்டி, அனைத்து எம்பிக்களும் டெல்லி சென்று பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். நான் முதல் வராக இருந்திருந்தால் பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டை முற்றுகையிட்டிருப்பேன். பொங் கலுக்குப் பிறகு அரசியல் சார் பின்றி, தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு, சென்னையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு போராட் டம் நடத்த இருக்கிறோம். இவ் வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x