Published : 28 Apr 2017 10:04 AM
Last Updated : 28 Apr 2017 10:04 AM

உதவியாளர், கணக்கர் உள்ளிட்ட பதவிகளில் 1,953 காலியிடங்களை நிரப்ப ஆகஸ்ட் 6-ல் குரூப் 2ஏ தேர்வு: மே 26-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,953 உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2ஏ தேர்வு ஆகஸ்ட் 6-ம் தேதி நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குரூப் 2ஏ-வில் அடங்கிய பதவிகளுக்கு (நேர்முகத்தேர்வு அல்லாதவை) 2017-18ம் ஆண்டுக் கான தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு அமைச்சுப் பணி, தலைமைச் செயலகப் பணி, சட்டப்பேரவைப் பணி ஆகியவற்றில் அடங்கிய உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச் சர் ஆகிய பதவிகளில் 1,953 காலிப் பணியிடங்கள் உள்ளன.

உதவியாளர், கணக்கர் பதவி களுக்கு ஏதேனும் ஒரு இளங் கலை பட்டப்படிப்பு அல்லது சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற் றிருக்க வேண்டும். நேர்முக உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச் சர் பதவிகளுக்கு இளங்கலை பட்டப்படிப்புடன் தட்டச்சு, சுருக் கெழுத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இத்தேர்வில் பங்கேற்க விரும்பு வோர் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net அல்லது www.tnpscexams.in ஆகிய இணைய தளங்கள் மூலம் ஆன்லைனில் மே 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப் பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், முன்னாள் ராணுவத்தினர் ஆகிய பிரிவினர் ஏற்கெனவே விண்ணப்பித்தபோது 3 அல்லது 2 முறை தேர்வுக் கட்டணச் சலுகை பெற்றிருந்தால், இப்போது கட்டாயம் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். உண்மையை மறைத்து, தேர்வுக் கட்டணம் செலுத்தாமல் இருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.

கடைசி நாளில் ஏராளமானோர் விண்ணப்பிக்கும்போது, விண் ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ, தொழில்நுட்பப் பிரச்சினைகளோ எழ வாய்ப்பு உள்ளது. இது போன்ற காரணங்களால், கடைசிக் கட்ட நாட்களில் விண்ணப்பிக்க இயலாமல் போனால் தேர் வாணையம் பொறுப்பாகாது. எனவே, கடைசி நாள் வரை காத் திருக்காமல் முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிப்பது குறித்து சந்தேகம் இருந்தால் 044-25332855, 25332833 ஆகிய தொலைபேசி எண்களிலோ, 1800-425-1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x