Published : 10 Nov 2014 08:46 AM
Last Updated : 10 Nov 2014 08:46 AM

காங்கிரஸிலிருந்து ‘ஒருசிலர் வெளியேறுவதால் பெரிய இழப்பு இல்லை’: கே.வி.தங்கபாலு பேட்டி

காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரு சிலர் வெளியேறுவதால் கட்சிக்கு பெரிய இழப்பு ஏதும் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு கூறினார்.

திருவண்ணாமலையில் செய்தி யாளர்களிடம் கே.வி.தங்கபாலு நேற்று கூறும்போது, “காங்கிரஸ் கட்சி எழுச்சியுடன் உள்ளது. எந்த தொய்வும் ஏற்பட்டுவிடவில்லை. காங்கிரஸ் கட்சி கடல் போன்றது. நிறையபேர் வருவார்கள், போவார்கள். வெளியே சென்ற வர்கள் காணாமல் போய்விடு வார்கள். ஒரு சிலர் வெளி யேறியதால் எந்த இழப்பும் ஏற்பட்டுவிடவில்லை. முன்பை விட வலுவாக உள்ளது.

கோஷ்டி அரசியல் என்பது அனைத்து கட்சியிலும் உள்ளது. கொள்கை ரீதியாக மேலிடம் எடுக்கும் அனைத்து முடிவு களுக்கும் ஒன்றுபட்டு நிற் கிறோம்.

சமூக ஓட்டத்தில் அரசியல் என்பது மக்களுக்கு தொண்டு செய்யும் விதத்தில் அமைய வேண்டும். பதவியில் இருக்கும்போது ஒரு நிலை, பதவியில் இல்லாதபோது ஒரு நிலை என்று நினைக்கும் நண்பர்கள் சமுதாயத்துக்கு பயன் பட மாட்டார்கள். காங்கிரஸில் இருந்து ஒருசிலர் மட்டும் விலகிச் சென்றுள்ளனர். கூண்டோடு யாரும் செல்லவில்லை. உண்மையான வர்கள், காங்கிரஸ் கட்சியில் உள்ளனர்.

உச்ச நீதிமன்றம் ஆணையால் சாதிவாரி கணக்கெடுப்பு தடைபடு வது துரதிர்ஷ்டவசமானது. நாட்டில் உள்ள சமூக தளங்களில் சாதியை தவிர்க்க முடியாது. சமூகத்தில் பின்தங்கிய, மிகவும் பின்தங்கிய, ஆதிதிராவிட, மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட சலுகைகளில் முன்னுரிமை அளிக்க சாதிவாரி கணக்கெடுப்பு ஏதுவாக அமையும்.

தமிழக மீனவர்கள் 5 பேர் மீது பொய் வழக்கு போட்டு தூக்குத் தண்டனையை இலங்கை அரசு விதித்துள்ளது. அந்த தண்டனையில் இருந்து 5 பேரும் விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்ப, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் அரசு கொண்டுவந்த திட்டங்களை மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. புதிய திட்டங்கள் ஏதும் இல்லை. தூய்மை இந்தியா திட்டத்தை வரவேற்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x