Published : 17 Feb 2014 12:00 AM
Last Updated : 17 Feb 2014 12:00 AM

டெல்லியில் யாரையும் சந்திக்கவில்லை- சென்னை திரும்பிய விஜயகாந்த் பேட்டி

டெல்லியில் யாரையும் சந்திக்கவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். கூட்டணி குறித்து பேசுவதற்காக டெல்லி செல்லவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் கடந்த வியாழக்கிழமை டெல்லி சென்றார். விஜயகாந்த் மனைவி பிரேமலதா, இளைஞர் அணிச் செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோரும் உடன் சென்றனர். மறுநாள் வெள்ளிக்கிழமை, பிரதமர் மன்மோகன் சிங்கை விஜயகாந்த் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அதில், தமிழக மீனவர்கள் பிரச்சினை, மணல் கொள்ளை, கடுமையான மின்வெட்டு, சட்டம்-ஒழுங்கு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த சந்திப்புக்குப் பிறகு விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் ஒரு ஓட்டலிலும் எம்.எல். ஏ.க்கள் மற்றொரு ஓட்டலிலும் தங்கியிருந்தனர். அவர்கள் 2 நாட் களாக அங்கேயே தங்கியிருந்த தால், கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தப் போவதாக செய்திகள் வந்தன. காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுலை சந்திக்க முயன்றதாகவும், அவர்கள் வெளிமாநில சுற்றுப் பயணத்தில் இருந்ததால் சந்திக்க முடியவில்லை என்றும் கூறப்பட் டது. காங்கிரஸ் முக்கிய தலைவர் களான குலாம்நபி ஆசாத் மற்றும் ஜிதேந்திர சிங்கை சந்தித்துப் பேசியதாகவும் தகவல்கள் வெளி யாகின. அதேநேரத்தில் பா.ஜ.க. தலைவர்களையும் விஜயகாந்த் சந் திக்க முயற்சித்தாக தெரிகிறது.

இந்நிலையில், விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் மூவரும் டெல்லியில் இருந்து ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் விமானத்தில் சென்னை திரும்பினர். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு விஜயகாந்த் அளித்த பேட்டி:

கூட்டணி குறித்து பேசத்தான் நீங் கள் டெல்லி சென்றதாக கூறப்படு கிறதே?

தமிழக மக்களின் பிரச்சினை கள், குறைகள் குறித்து பிரதம ரிடம் தெரிவிக்கத்தான் எம்.எல்.ஏ.க்களுடன் சென்றோம். பிரதமரைச் சந்தித்தபோது, ‘எதிர்க்கட்சி தலைவராக இருந்து நீங்கள் என்னை நேரில் வந்து சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக மக்களின் பிரச்சினை பற்றி உங்கள் முதல்வர் என்னிடம் நேரில் வந்து பேசுவதில்லை. பிறகு, முதல்வரை எப்படி மக்கள் நேரில் சந்தித்துப் பேச முடியும்’ என கேட்டார். மேலும், எங்களின் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளார். மற்றபடி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் டெல்லி செல்லவில்லை.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், டெல்லிக்கு வந்து பிரதமரைச் சந்திப்பீர்களா?

எந்த ஆட்சி அமைந்தாலும் தமிழக மக்கள் பிரச்சினையிலும், மீனவர் பிரச்சினையிலும் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம்.

டெல்லியில் உங்களை யாராவது சந்தித்தார்களா?

டெல்லியில் எந்தக் கட்சித் தலைவரையும் நாங்கள் சந்தித்து பேசவும் இல்லை. யாரும் எங்களையும் சந்திக்கவில்லை.

கூட்டணி குறித்து என்ன முடிவு எடுத்துள்ளீர்கள்?

கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவும் செய்யவில்லை. கூட்டணி என்பது ரகசியமாக இருப்பது அல்ல. கூட்டணி இறுதி யானால், மறுநாளே உங்களை அழைத்து அறிவிப்பேன்.

இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x