Published : 12 Mar 2017 02:15 PM
Last Updated : 12 Mar 2017 02:15 PM

மதுரையில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்: ஒழிப்பு நடவடிக்கையில் 525 சிறப்பு களப்பணியாளர்கள்

மதுரையில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், மாநகராட்சி சார்பில் 525 களப் பணியாளர்கள் தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு பருவமழைக் காலங்களில், மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் டெங்கு பரவல் அதிகமாக இருந்தது. தற்போது மக்கள் விலைக்கு வாங்கும் தண்ணீரை, வீடுகளில் பாதுகாப்பு இல்லாமல் திறந்தவெளியில் சேமித்து வைப்பதால் அதில் கொசு அதிகமாக உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பாதிப்பு எல்லா காலங்களிலும் ஏற்படுகிறது. தற்போது, கோடை மழையும் அவ்வப்போது பெய்வதால் குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்குகிறது. அதனால், மாநகராட்சி பகுதிகளில் மீண்டும் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால், டெங்கு தடுப்பு பணிக்காக மாநகராட்சி சார்பில் சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட தலா 25 பேர் கொண்ட 21 குழுக்களில் 525 சிறப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரி கூறியதாவது: டெங்கு ஒழிப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள், ஒவ் வொரு வீடாகச் சென்று கொசு உற்பத்தி யாகும் இடங்களை கண்டறிந்து தேவை யில்லாத பொருட்களை அப்புறப் படுத்தி வருகின்றனர். தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் அபேட் மருந்து தெளித்தல், குப்பைகளை அகற்றுதல், விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து வார்டு பகுதிகளில் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் கண்ட பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு நிலவேம் புக் கசாயம் வழங்கப்பட்டுவருகிறது.

மேலும் மாநகராட்சியின் அனைத்து மருத்துவமனைகளிலும், பள்ளிகளிலும் தொடர்ந்து நிலவேம்புக் கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு உற்பத் தியை தடுக்கும் வகையில் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக புதிதாக கட்டுமானப் பணி நடைபெறும் கட்டிடங்கள், மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், திரு மண மண்டபங்கள், பள்ளிகள், தங் கும் விடுதிகள், திரையரங்குகளில் மாநகராட்சி சார்பில் ஆய்வு மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வீடுகளில் பரிசோதனை செய்ய அனுமதிக்காவிடில் போலீஸில் புகார்

சந்தீப் நந்தூரி மேலும் கூறுகையில், மாநகராட்சி பணியாளர்கள் வீடுகளுக்கு வரும்போது கள ஆய்வு மேற்கொள்ள முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அவர்களை அனுமதிக்காவிட்டால் போலீஸில் புகார் செய்யப்படும். கொசு உற்பத்தியாவது கண்டறியப் பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப் படும். எனவே பொது மக்களும் ஏனைய தொழில் நிறுவனத்தினரும் தங்கள் இடங்களில் கொசுப் புழு உற்பத்தியாகாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x