Published : 02 Sep 2016 06:34 PM
Last Updated : 02 Sep 2016 06:34 PM

அரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழக அரசு பணியில் இருக்கும் ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் பதவி உயர்வுக்கான துறைத்தேர்வுகள் ஆண்டுக்கு 2 தடவை (மே, டிசம்பர்) டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான 2-வது துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதற்கு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா அறிவித்துள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x