Published : 13 Feb 2014 06:42 PM
Last Updated : 13 Feb 2014 06:42 PM

சென்னை போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாண அரசு புதிய யோசனை

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாண புதிய தொழில்நுட்பத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 2014-15 ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்பு:

2014-2015 ஆண் ஆண்டில் ஜவஹந்லால்நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்புத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் 200 கோடி ரூபாய் செலவில் பழைய பேருந்துகளை மாற்ற 1,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.

மாநிலப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு 2014-2015 ஆண் ஆண்டிற்கு டீசல் மானியமாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகரத்தில் ஒரு புதிய நுண்ணறிவுப் போக்குவரத்து அமைப்பை செயல்படுத்த அரசு உத்தேசித்துள்ளது. சென்னை மாநகரப் போக்குவரத்து அமைப்பிற்கான இந்த உயர் தொழில்நுட்பத் தீர்வைச் செயல்படுத்துவதற்கான முதல் கட்ட ஆய்வு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியும் விரைவில் மேற்கொள்ளப்படுண். சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கியத் தீர்வாக இது அமையும்.

சென்னை மாநகரத்தில் பன்முறை போக்குவரத்து அமைப்பு நிறுவப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மோனோ ரயில் திட்டம், செயல்படுத்தத்தக்க முறையில் திருத்தி அமைக்கப்பட்டு, இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2014-2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகரத்தின் பேருந்துப் போக்குவரத்தின் திறனை உயர்த்தவும், அதை பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்த ஏதுவாகவும் ஜி.பி.எஸ். வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த பேருந்து தகவல் அமைப்பு முறை செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் கீழ் அனைத்துப் பேருந்துகளின் தடம் அறிந்து, பேருந்து நிறுத்தங்களில் தகவல் அளிப்பதற்காக அனைத்து மாநகரப் பேருந்துகளிலும் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்படும். முதல் கட்டமாக, 500 பேருந்து நிறுத்தங்களை இணைத்து, தட வரைபடங்கள், வரவிருக்கும் பேருந்து பற்றிய தகவல்களும் இதர வசதிகளும் கொண்ட பொதுத் தகவல் முறை அமைக்கப்படும். படிப்படியாக மாநகரத்தில் உள்ள அனைத்துப் பேருந்து நிறுத்தங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x