Published : 29 Mar 2014 10:50 AM
Last Updated : 29 Mar 2014 10:50 AM

போலி ஏடிஎம் கார்டுகள் தயாரித்து ரூ.20 லட்சம் மோசடி: ஹைடெக் திருட்டு கும்பலை சேர்ந்த 5 பேர் கைது

கடைக்கு வரும் வாடிக்கையாளர் களின் ஏடிஎம் கார்டுகள் தகவல் களை திருடி, போலி ஏடிஎம் கார்டு களை தயாரித்து ரூ.20 லட்சத் துக்கும் மேல் மோசடி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எச்டிஎப்சி வங்கியின் மேலாளர் கோபிநாத் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில், "வங்கி வாடிக்கையாளர்கள் பலரது வங்கிக் கணக்கில் இருந்து போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் பல லட்சம் பணம் திருடப்பட்டுள்ளது. தங்களுக்கு வழங்கப்பட்ட ஏடிஎம் கார்டுகளை வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக வைத்திருக்கும் நிலையில், வெளி மாநிலங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் இருந்து வாடிக்கையாளர்களின் கணக்கில் உள்ள பணம் திருடப்பட்டுள்ளது. சென்னை அமைந்தகரையில் பிரபலமான வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடையில் ஏடிஎம் கார்டை பயன்படுத்திய பின்னரே பணம் திருடப்பட்டுள்ளது. எனவே அந்த கடையில்தான் ஏடிஎம் கார்டின் தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம்" என்று கூறப்பட்டிருந்தது.

புகாரையடுத்து மத்திய குற்றப் பிரிவு காவல் துறை உதவி ஆணையர் ஜெயசிங், ஆய்வாளர் கள் நாகராஜன், விஜயகுமார், ரஞ்சித்குமார் ஆகியோர் தலை மையில் நடத்தப்பட்ட விசார ணையில், அமைந்தகரை வணிக வளாகத்தில் உள்ள அந்த கடையில் வாடிக்கையாளர்களின் ஏடிஎம் கார்டுகள் தகவல்களை சிவசூரியா(24) என்பவர் திருடியது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

பொருட்களை வாங்கிக் கொண்டு அதற்கு பில் போட டெபிட் அல்லது கிரெடிட் கார்டு களை கொடுக்கும்போது அவை வங்கி இடிசி (எலக்ட்ரானிக் டேட்டா கேப்சர்) இயந்திரத்தில் தேய்க்கப்படுகின்றன. மேலும் அந்த கடையின் மெம்பர்ஷிப்பிற் காக கம்ப்யூட்டரில் தேய்க்கப்பட்டு அந்த கார்டின் முழுத்தகவல்களும் சேமிக்கப்படுகின்றன. இந்நிலை யில் அந்த கடையில் பில் போடுபவராக வேலை செய்யும் சிவசூரியா, கம்ப்யூட்டரில் இருந்து தகவல்களை திருடியிருக்கிறார். வாடிக்கையாளர் டைப் செய்யும் ரகசிய குறியீட்டு எண்ணையும் கவனமாக குறித்து வைத்திருக்கிறார். பின்னர் இந்த தகவல்களை ஒரு டேட்டாவிற்கு ரூ.200 வீதம் சிஜுஜான் (29) என்பவரிடம் விற்றிருக்கிறார்.

சிஜுஜான் போரூரில் தனி அறையை வாடகைக்கு எடுத்து போலி ஏடிஎம் கார்டுகளை தயாரித் திருக்கிறார். பின்னர் அந்த கார்டுகளை வைத்து மவுலிவாக் கத்தில் உள்ள தனது கூட்டாளி முருகன் என்பவரின் ஜவுளிக் கடையில் உள்ள இடிசி இயந் திரங்களில் கார்டுகளை தேய்த்து வங்கிகள் மூலம் பல லட்சம் பணம் பெற்றுள்ளனர். வெளி மாநிலத்தை சேர்ந்த சிலரிடம் இந்த போலி கார்டுகளை கொடுத்து, அங்குள்ள ஏடிஎம் மையங்களில் இருந்தும் பணம் எடுத்துள்ளனர். இப்படி ரூ.20 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்துள்ளனர்.

மேலும் இவர்களின் மோசடிக்கு உடந்தையாக இருந்த விஜயகுமார் என்பவரின் வீட்டை சோதனையிட்டபோது, அரசாங்க முத்திரைகள், வங்கி ஆவணங்கள் பல போலியாக தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. ஆர்.சி. புத்தகங்கள், ஐ.டி. கார்டுகள், பேன் கார்டுகள், அதிக பண பரிமாற்றம் நடந்ததாக காட்டும் வங்கி ஸ்டேட்மெண்ட்கள், போலி ரேஷன் கார்டுகள் என பல ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டி ருந்தன. விஜயகுமாரின் தம்பி ராஜாவும் இந்த மோசடிகளுக்கு உடந்தையாக இருந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, சிவ சூரியா, சிஜுஜான், முருகன், விஜய குமார், ராஜா ஆகிய 5 பேரும் வியாழக்கிழமை கைது செய்யப் பட்டனர். அவர்களிடம் இருந்து 12 இடிசி இயந்திரங்கள், 3 லேப்டாப் கள், 40 டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், 5 செல்போன்கள், ரூ.1.40 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x