Published : 30 Jun 2015 09:21 AM
Last Updated : 30 Jun 2015 09:21 AM

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள்

ஆர்.கே.நகர் சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா 1,50,722 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன், சுயேட்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட ஏனைய வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர்.

ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன.

14.00 pm: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெற்றி பெற்றுள்ளதற்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார் "வாழ்வில் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ அன்னை பராசக்தியை பிரார்த்திக்கிறேன்" என வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

13.55 pm: டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதா பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து, தமிழக ஆளுநர் ரோசய்யா, ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

சுற்று வாரியாக வாக்கு எண்ணிக்கை நிலவரம்:

பதினேழாம் சுற்று முடிவில்...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றார்.

ஜெயலலிதா (அதிமுக) - 1,60,432

மகேந்திரன் (இ.கம்யூ.) - 9,710

டிராபிக் ராமசாமி - 4590

நோட்டா - 2376

13.15 pm: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜெயலலிதா இன்று மாலையே சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றுக் கொள்வார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதினாறாம் சுற்று முடிவில்...

ஜெயலலிதா (அதிமுக) - 1,55,447 வாக்குகள்

மகேந்திரன் (இ.கம்யூ.) - 9,496 வாக்குகள்

டிராபிக் ராமசாமி - 4494



பதினைந்தாவது சுற்று முடிவில்...

ஜெயலலிதா (அதிமுக) - 1,46,247 வாக்குகள்

மகேந்திரன் (இ.கம்யூ.) - 8,854 வாக்குகள்

டிராபிக் ராமசாமி - 4359



12.53 pm: ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றி மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடையாளம் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

பதிநான்காம் சுற்று முடிவில்...

ஜெயலலிதா (அதிமுக) - 1,35,248 வாக்குகள்

மகேந்திரன் (இ.கம்யூ.) - 8,118 வாக்குகள்

டிராபிக் ராமசாமி - 4145



12.23 pm: ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜெயலலிதா, மக்கள் தம் மீது வைத்த நம்பிக்கைக்கு ஏற்ப பாடுபடுவேன் என தெரிவித்துள்ளார்.



பதிமூன்றாம் சுற்று முடிவில்...

ஜெயலலிதா (அதிமுக) - 1,26,395 வாக்குகள்

மகேந்திரன் (இ.கம்யூ.) - 7,743 வாக்குகள்

டிராபிக் ராமசாமி - 3920



பனிரெண்டாம் சுற்று முடிவில்...

ஜெயலலிதா (அதிமுக) - 1,17,572 வாக்குகள்

மகேந்திரன் (இ.கம்யூ.) - 7,193 வாக்குகள்

டிராபிக் ராமசாமி - 3604 வாக்குகள்



பதினொன்றாம் சுற்று முடிவில்...

ஜெயலலிதா (அதிமுக) - 1,09,182 வாக்குகள்

மகேந்திரன் (இ.கம்யூ.) - 6731 வாக்குகள்

டிராபிக் ராமசாமி - 3260 வாக்குகள்

நோட்டா - 1680



பத்தாவது சுற்று முடிவில்...

ஜெயலலிதா (அதிமுக) - 98,519 வாக்குகள்

மகேந்திரன் (இ.கம்யூ.) - 6,269 வாக்குகள்

டிராபிக் ராமசாமி - 2,939



11.54 am: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி தமிழகத்தில் நிலவிவந்த மின் பற்றாக்குறையை போக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், அரசின் சமூக நலத்திட்டங்களுமே காரணம் என கூட்டணி கட்சிகளான இந்திய குடியரசு கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியன கருத்து தெரிவித்துள்ளன.



ஒன்பதாவது சுற்று முடிவில்...

ஜெயலலிதா (அதிமுக) - 87,026 வாக்குகள்

மகேந்திரன் (இ.கம்யூ.) - 5,941 வாக்குகள்

டிராபிக் ராமசாமி - 2,772 வாக்குகள்



எட்டாவது சுற்று முடிவில்...

ஜெயலலிதா (அதிமுக) - 76,858 வாக்குகள்

மகேந்திரன் (இ.கம்யூ.) - 5,417 வாக்குகள்

டிராபிக் ராமசாமி - 2,492 வாக்குகள்



11.00 am: 8 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள நிலையில், யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை தெரிவிக்கும் 'நோட்டா' 1150 பதிவாகியுள்ளன.



ஏழாவது சுற்று முடிவில்...

ஜெயலலிதா (அதிமுக) - 67,453 வாக்குகள்

மகேந்திரன் (இ.கம்யூ.) - 4,816 வாக்குகள்

டிராபிக் ராமசாமி - 2226 வாக்குகள்



10.50 am: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்தார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அவருடன் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் வந்தார். அமைச்சர் வளர்மதி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.



ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக முன்னிலை பெற்றதை கொண்டாடும் அமைச்சர் வளர்மதி | படம்: எல்.சீனிவாசன்.

ஆறாவது சுற்று முடிவில்...

ஜெயலலிதா (அதிமுக) - 57,851 வாக்குகள்

மகேந்திரன் (இ.கம்யூ.) - 4,287 வாக்குகள்

டிராபிக் ராமசாமி - 1,965 வாக்குகள்



10.35 am: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றாலும், ஜனநாயகம் தோற்றுவிட்டது என இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் தெரிவித்துள்ளார். > |ஆர்.கே.நகரில் அதிமுக வெற்றி... ஜனநாயகம் தோல்வி: சி.மகேந்திரன் கருத்து|

ஐந்தாம் சுற்று முடிவில்...

ஜெயலலிதா (அதிமுக) - 48,604 வாக்குகள்

மகேந்திரன் (இ.கம்யூ.) - 3,653 வாக்குகள்

டிராபிக் ராமசாமி - 1,583 வாக்குகள்



நான்காம் சுற்று முடிவில்...

ஜெயலலிதா (அதிமுக) - 38,510 வாக்குகள்

மகேந்திரன் (இ.கம்யூ.) - 2,799 வாக்குகள்

டிராபிக் ராமசாமி - 1,120 வாக்குகள்



மூன்றாம் சுற்று முடிவில்...

ஜெயலலிதா (அதிமுக) - 30,033 வாக்குகள்

மகேந்திரன் (இ.கம்யூ.) - 2,287 வாக்குகள்

டிராபிக் ராமசாமி - 875 வாக்குகள்



இரண்டாம் சுற்று முடிவில்...

ஜெயலலிதா (அதிமுக) - 20,302 வாக்குகள்

மகேந்திரன் (இ.கம்யூ.) - 1,637 வாக்குகள்

டிராபிக் ராமசாமி - 543 வாக்குகள்



முதல் சுற்று முடிவில்...

ஜெயலலிதா (அதிமுக) - 9,562 வாக்குகள்

மகேந்திரன் (இ.கம்யூ.) - 930 வாக்குகள்

டிராபிக் ராமசாமி - 289 வாக்குகள்

10.10 am: 5-வது சுற்றின் முடிவில், 879 பேர் 'நோட்டா' தேர்வு செய்துள்ளனர்.

10.00 am: யாருக்கும் வாக்கு அளிக்க விருப்பமில்லை என்பதை தெரிவிக்கும் வகையில், 505 பேர் 'நோட்டா' தேர்வு செய்துள்ளனர்.

9.48 am: முதல் மூன்று சுற்று முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா தொடர்ந்து அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதால் அதிமுக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் குவிந்துள்ள தொண்டர்கள் இனிப்புகள் பரிமாறியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெயலலிதா முன்னிலை

சென்னை ராணி மேரி கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதலில் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை திறக்கப்பட்டு, தபால் வாக்குகள் எண்ணப்பட்டன, இதில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா 16 வாக்குகளுடன் முன்னிலை பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் ஒரு வாக்குகூட பெறவில்லை. அடுத்ததாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது | படம்: பி.ஜோதி ராமலிங்கம்.

சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ம் தேதி நடந்தது. இதில் 74.4 சதவீத வாக்குகள் பதிவாகின. 181-வது வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளில் குழப்பம் ஏற்பட்டதால், அங்கு மட்டும் நேற்று (திங்கள்கிழமை) மறு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x