Published : 16 Jun 2016 07:55 AM
Last Updated : 16 Jun 2016 07:55 AM

ஆதார் அட்டை விவரங்களை பதிவு செய்ய 12 ஆயிரம் ரேஷன் கடைகளுக்கு ஸ்கேன் கருவிகள் விநியோகம்

கொப்பரைத் தேங்காய் கொள்முதலும் தொடங்கியது

தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் பொது விநியோகக் கடைகளில் ஆதார் அட்டை விவரங்களை பதிவு செய்வதற்காக ‘ஸ்கேனிங்’ கருவிகள் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தற்போது ஒரு கோடியே 97 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த குடும்ப அட்டைகள் கடந்த 2009-ம் ஆண்டே காலாவதியாகிவிட்டன. புதிய அட்டைகள் வழங்குவதற்கு பதில், ஆண்டுதோறும் உள்தாள் ஒட்டப் பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் செயல்படுத்தப் படும் என அறிவித்து, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. தேசிய மக்கள் தொகை பதிவேட் டின் அடிப்படையில் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அரியலூர், புதுக் கோட்டை, பெரம்பலூர் மாவட்டங் களில் முன்னோடி திட்டமாக ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது இப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், பொது விநி யே ாகத் திட்டத்தில் ஆதார் விவரங் களை இணைக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்படாத நிலையில், பொதுமக்கள் அளிக்கும் விவரங்கள் பதிவு செய்யப்படு கின்றன. வட்டார வழங்கல் அலு வலகங்கள், மண்டல உணவுப் பொருள் வழங்கல் அலுவலகங் களில் புதிய குடும்ப அட்டை கேட்டும் திருத்தம், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற் றுக்கும் விண்ணப்பிக்கும்போது குடும்ப அட்டையில் உள்ள உறுப் பினர்களின் ஆதார் விவரங்கள் பெறப்படுகின்றன. இதுதவிர சில பகுதிகளில் பொது விநியோக கடைகளிலும், பொதுமக்களிடம் இருந்து விவரங்கள் பெறப்பட்டு வருகின்றன.

அவ்வாறு பதிவு செய்யும் போ து, ஆதார் எண் விவரங்கள் விடு படாமல் இருக்க வேண்டும் என்ப தற்காக, புதிய தொழில்நுட்பத்தை தமிழக உணவு, கூட்டுறவுத்துறை பயன்படுத்துகிறது.

இது தொடர்பாக உணவு மற்றும் கூட்டுறவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பொதுமக்களிடம் ஆதார் விவரங்களை பெற்று பதிவு செய்யும்போது, அதில் தவறுகள் நடக்கலாம் என்பதால், ஆதார் அட்டைகளை ஸ்கேன் செய்து பதிவேற்ற முடிவெடுக்கப்பட்ட து. இதற்காக முதல்கட்டமாக 12 ஆயிரம் ஸ்கேன் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இந்தக் கரு விகள் தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் கடைகளுக்கு வழங்கப் பட்டுள்ளன. தொடர்ந்து, மற்ற கடைகளுக்கும் வழங்கப்படும்.

முதல்வர் ஜெயலலிதா அறி வித்தபடி, கொப்பரைத் தேங்காய் கொள்முதல் இன்று (15-ம் தேதி) தொடங்கியுள்ளது. 20 மாவட்டங் களில் அமைக்கப்பட்டுள்ள 43 கொள்முதல் நிலையங்களில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு விவசாயியிடம் இருந் தும் அவர் உற்பத்தி செய்யும் கொப்பரையில் இருந்து 25 சதவீ தம் அளவு மட்டுமே கொள்முதல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x