Published : 22 Jun 2017 08:19 AM
Last Updated : 22 Jun 2017 08:19 AM

18 வயது மாணவர் உருவாக்கிய எடை குறைந்த செயற்கைக்கோள்: இன்று விண்ணில் ஏவப்படுகிறது

மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள ‘கலாம் சாட்’ என்ற உலகிலேயே எடை குறைந்த செயற்கைக்கோள் இன்று விண்ணில் ஏவப்படுகிறது.

‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற அமைப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்து சர்வதேச அளவிலான கல்வியை மாணவர்களுக்கு அளித்து வருகிறது. குறிப்பாக, விண்வெளி ஆய்வு குறித்து மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.

நாசா தேர்வு

இந்நிலையில், அமெரிக்கா வின் நாசா விண்வெளி மையம் நடத்திய போட்டி ஒன்றில் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 18 வயது மாணவர் ரிபாத் ஷரூக் உருவாக்கிய உலகிலேயே மிகவும் எடை குறைந்த செயற்கைக்கோள் தேர்வு செய்யப்பட்டது.

கலாம் சாட்

‘கலாம் சாட்’ என பெயரிடப் பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் 3.8 கன சென்டி மீட்டர் உயரமும், 64 கிராம் எடையும் கொண்டது. மேலும், 3டி பிரின்ட் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள் நாசாவின் ‘எஸ்.ஆர்.4’ என்ற ராக்கெட் மூலம் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x