Published : 12 Jul 2016 08:24 AM
Last Updated : 12 Jul 2016 08:24 AM

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கை: ஒதுக்கீட்டு ஆணையை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் வழங்கினார்

சென்னை மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர கலந்தாய்வு முறையில் பயிற்சி நிலையத்தை தேர்வு செய்த மாணவர்களுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) உள்ள இடங்கள் மற்றும் தனியார் ஐடிஐ-க் களில் 50 சதவீத இடங்கள் மாவட்ட அளவிலான கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகி்ன்றன. அந்த வகையில், தற்போது தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

சென்னை மாவட்டத்தில் வடசென்னை அரசு ஐடிஐ-யில் நேற்று நடைபெற்ற கலந்தாய்வில் தங்களுக்கு விருப்பமான பயிற்சி நிலையத்தை தேர்வுசெய்த மாண வர்களுக்கு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல், ஒதுக்கீட்டு ஆணையை வழங்கி னார். அப்போது அவர் கூறியதா வது:

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு களில் மட்டும் 23 புதிய அரசு ஐடிஐ பயிற்சி நிலையங்கள் தொடங் கப்பட்டுள்ளன. கலந்தாய்வு மூலம் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான ஐடிஐ-யையும், பாடப்பிரிவையும் தேர்வுசெய்து கொள்ளலாம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஐடிஐ-க்களில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.500 உதவித்தொகை, பஸ் கட்டணச் சலுகை, சைக்கிள், லேப் டாப், பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், 2 செட் சீருடைகள், ஒரு செட் ஷூ ஆகியவை வழங்கப்படு கின்றன. அதேபோல், கலந்தாய்வு மூலம் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியார் ஐடிஐ-யில் சேரும் மாணவர்களுக்கான பயிற்சி கட்டணத்தை அரசே வழங்குகிறது. ஐடிஐ முடிப் போருக்கு அரசு மற்றும் தனியார் துறையிலும் உள்நாடு மற்றும் வெளி நாடுகளிலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. தற்போது உலக அளவில் திறன்மிக்க தொழி லாளர்களுக்குப் பற்றாக்குறை இருப்பதால் ஐடிஐ பயிற்சி முடிப் போருக்கு வேலை வாய்ப்புகள் அதிகம். எனவே, மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் நிலோபர் கபீல் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலாளர் பி.அமுதா, வேலை வாய்ப்பு பயிற்சித்துறை இயக்குநர் சி.சமயமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x