Published : 25 Mar 2017 09:34 AM
Last Updated : 25 Mar 2017 09:34 AM

பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு ஏப்ரல் 9 முதல் 11 வரை சான்றிதழ் சரிபார்ப்பு: வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனம்

அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றோருக்கு ஏப்ரல் 9 முதல் 11-ம் தேதி வரை அந்தந்த மாவட்டங்களில் சான்றிதழ் சரி பார்ப்பு நடத்தப்படுகிறது. நேர்முகத் தேர்வு இல்லாமல் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்துக்கான எழுத்துத் தேர்வு 30.05.2015 அன்று நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் நேற்று இணைய தளத்தில் வெளி யிடப்பட்டன. அதன் அடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டத்திலுள்ள காலிப் பணி யிடங்களுக்கு ஏற்ப 1:5 விகிதாச் சாரப்படி, சான்றிதழ் சரிபார்ப்புக் கான பட்டியல் மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர்களால் வெளியிடப்படும். இந்த பட்டியல் விண்ணப்பதாரர் எழுத்துத்தேர்வில் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீடு மற்றும் விண்ணப்பிக்கும்போது அளித்திருந்த விவரங்கள் அடிப் படையில் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும்.

சான்றிதழ் சரிபார்ப்புப் பணி ஏப்ரல் 9, 10, 11 ஆகிய நாட்களில், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் அறிவிக்கப்படும் மையங்களில் நடத்தப்படும். சான் றிதழ் சரிபார்ப்பின்போது, விண் ணப்பத்தில் தெரிவித்திருந்த விவரங் களுக்குரிய சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின்போது வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட உள்ளது.

ஆய்வக உதவியாளர் தேர் வுக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப் பட்டிருந்த கடைசி நாளான 06.05.2015 வரையிலான தகுதியுள்ள, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு முன் னுரிமை, உயர்கல்வித் தகுதி, ஆய்வக உதவியாளர் பணி அனு பவம் ஆகியவை மட்டுமே கருத் தில் கொள்ளப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாளில் சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவணங் களின் அடிப்படையில்தான் வெயிட் டேஜ் மதிப்பெண் வழங்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் கருத்தில் கொள்ளப்படாது.

ஆய்வக உதவியாளர் பணி அனுபவத்தைப் பொறுத்தவரை யில், தமிழக அரசால் அங்கீகரிக் கப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரி களில் பணிபுரிந்த 06.05.2015 வரை யிலான பணிக்காலம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். அவ்வாறு பள்ளிகளில் பணிபுரிந்திருந்தால், பணி அனுபவச் சான்றில், சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரிடமும், கல்லூரிகளில் பணிபுரிந்திருப்பின் பணி அனுபவச் சான்றில், சம்பந்தப்பட்ட மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்கு நரிடம் மேலொப்பம் (Counter sign) பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், விண்ணப்பதாரரின் எழுத்துத்தேர்வு மதிப்பெண், உயர்கல்வித்தகுதி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, பணிஅனுபவம் ஆகியவற் றுக்கான மதிப்பெண் அடிப்படை யில் தகுதிப்பட்டியல் (மெரிட் லிஸ்ட்) தயார் செய்யப்படும். இந்த பட்டியலின் பேரில் இட ஒதுக்கீடு அடிப்படையில், காலிப் பணியிடங் களுக்கு தகுதியான நபர்கள் தெரிவு செய்யப்பட்டு, தெரிவுப்பட்டியல் உடனடியாக வெளியிடப்படும். பணிக்கு தெரிவு செய்யப்பட்டோ ருக்கு பணி நியமன ஆணை வெளிப்படையான கலந்தாய்வின் மூலம் சம்பந்தப் பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களால் வழங்கப் படும். இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வு கிடையாது

ஆய்வக உதவியாளர் பணிநியமனத்துக்கு நேர்முகத் தேர்வும் நடத்த முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டாலும் அந்த மதிப்பெண்ணை கணக்கில் கொள்ளாமல் நேர்முகத் தேர்வு மதிப்பெண் மற்றும் உயர்கல்வித்தகுதி, பணிஅனுபவம் ஆகியவற்றுக்கான மதிப்பெண் அடிப்படையில் ஆய்வக உதவியாளர்களைத் தேர்வுசெய்ய முடிவுசெய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த நியமனத்தை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

பணி நியமனத்துக்கு எழுத்துத்தேர்வு மதிப்பெண்ணையும் கருத்தில்கொள்ள வேண்டும் என்று அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணையும் கருத்தில்கொண்டு ஆய்வக உதவியாளர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.

அதோடு அரசு உத்தேசித்திருந்த நேர்முகத் தேர்வு ரத்துசெய்யப்பட்டு இருக்கிறது. நேர்முகத் தேர்வு நடத்தினால் அது சிபாரிசுக்கு வழிவகுக்கக்கூடும் என்று பல்வேறு தரப்பினரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x