Published : 22 Sep 2015 08:32 AM
Last Updated : 22 Sep 2015 08:32 AM

திருவள்ளுவர் சிலையை வணங்கி ‘நமக்கு நாமே’ பயணம் தொடங்கினார் மு.க.ஸ்டாலின்

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை வணங்கி, நமக்கு நாமே பயணத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங் கினார்.

திரிவேணி சங்கமத்தில் நின்று கடல்நடுவே அமைந்துள்ள திரு வள்ளுவர் சிலையை வணங்கினார். பின்னர் காந்தியடிகள், காமராஜர் நினைவிடங்களுக்குச் சென்று மாலை அணிவித்தார். காமராஜர் மணிமண்டபம் அருகே அவர் பேசியதாவது:

அய்யா வைகுண்டர், மார்ஷல் நேசமணி, ஜீவா போன்ற பெரியோர் களை தந்தது இம்மாவட்டம். இத்தகைய பெருமைமிகுந்த கன்னியாகுமரியில் இருந்து பயணத்தை தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது.

மகளிர் சுயஉதவிக் குழுக்களை தான் தொடங்கியதாக ஜெயலலிதா கூறிவருகிறார். இது அப்பட்டமான பொய். 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது சுய உதவிக் குழுக்களை சமூக நலத் துறையில் இருந்து பிரித்து, உள் ளாட்சி துறைக்கு மாற்றி கடன் வசதி, சுழல்நிதி கொடுக்க தேவையான முயற்சிகள் செய்யப்பட்டன.

இந்த ஆட்சியில் முதியோருக் கான பென்ஷன் தொகையை கொடுக்கவில்லை. இதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளேன்.

மது ஒழிப்புக்காக இங்கு பிரச்சாரம் செய்ய வந்த காந்திய வாதி சசிபெருமாள் காப்பாற்றப் பட்டிருக்க வேண்டும். இவரது இறப்பு தற்கொலை இல்லை. அது கொலைக்கு சமமானது.

தமிழகத்தில் தேர்தல் வருவதற்கு இன்னும் 237 நாட்கள்தான் உள்ளன. திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்பதே முதல் வேலை என்று கருணாநிதி அறிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வர ஒத்துழைக்க வேண்டும்’ என்றார் அவர்.

வணிகர்களுடன் சந்திப்பு

பின்னர் பிரச்சார வேனில் நாகர்கோவில் சென்றார். வழியில் மகாதானபுரம், கொட்டாரம், சுசீந்திரம் ஆகிய இடங்களில் பொது மக்களை சந்தித்தார். நாகர்கோவில் சவேரியார் தேவாலயத்தில் பிரார்த் தனை செய்த பின், கோட்டாறு வர்த்தக சங்க அலுவலகத்தில் வணி கர்களுடன் கலந்துரையாடினார்.

திமுக ஆட்சி வந்ததும் உழவர் சந்தை முழு வீச்சில் அமல் படுத்தப்படும். விலைவாசி கட்டுப் படுத்தப்படும். வணிகர்களுக்கு சுதந்திரமாக தொழில் செய்யும் சூழல் ஏற்படுத்தப்படும் என்று அப்போது அவர் தெரிவித்தார்.

விவசாயிகளுடன் உரையாடல்

ராஜாக்கமங்கலத்தில் தென்னை விவசாயிகளை ஒரு தென்னந் தோப்பிலேயே சந்தித்தார். அப்போது அவர், ‘‘தமிழகத்தில் நடப்பது ஆட்சி அல்ல, காணொலி காட்சி. திமுக ஆட்சியில்தான் ஏழைகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கியிருந்த கடனை 2006-ம் ஆண்டு முழுமையாய் ரத்து செய்த வர் கருணாநிதி. இதில் பெரும் பலன் அடைந்தது அதிமுகவினர்தான். ரப்பருக்கு உரிய விலை கிடைக்க, கொப்பரை தேங்காய் விலை உயர திமுக ஆட்சியில் முயற்சி மேற்கொள்ளப்படும்” என்றார்.

பின்னர் வெள்ளிமலை கோயில் ஆசிரம நிர்வாகிகளையும், குளச் சலில் இஸ்லாமிய ஜமாத் தலை வர்களையும் சந்தித்தார். தொடர்ந்து கருங்கல், தேங்காய்ப்பட்டணம், மார்த்தாண்டம், தக்கலையில் பிரச்சார பயணம் மேற்கொண்டார். மாவட்ட திமுக செயலாளர்கள் சுரேஷ்ராஜன், மனோதங்கராஜ், முன்னாள் எம்பி ஹெலன் டேவிட்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x