Published : 14 Oct 2014 09:16 AM
Last Updated : 14 Oct 2014 09:16 AM

4,963 காலிப் பணியிடங்களை நிரப்ப டிசம்பரில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பிக்க நவ. 12 கடைசி

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் குரூப்-4 பிரிவில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவர் உட்பட பல்வேறு பதவிகளில் காலியாக இருக்கும் 4,963 பணியிடங்களுக்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

டிஎன்பிஎஸ்சி தொகுதி IV-ல் அடங்கிய கீழ்க்காணும் பதவிக ளுக்கான அறிவிக்கை 14-ம் தேதி (இன்று) வெளியிடப்படுகிறது. இளநிலை உதவியாளர் (பிணை யம்) (39), இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) (2133), தட்டச்சர் (1683), சுருக்கெழுத்து தட்டச்சர் (331), வரித் தண்டலர் (22), வரைவாளர் (53), நில அளவர் (702) என மொத்தம் 4,963 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான தேர்வு டிசம்பர் 21-ம் தேதி நடக்கவுள்ளது. மாவட்ட, தாலுகா தலைமையிடங்கள் என மொத்தம் 244 மையங்களில் தேர்வு நடக்கிறது.

இதற்கான கல்வி தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி. 18 வயது நிரம் பியிருக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 12-ம் தேதி கடைசி நாள்.

நவம்பர் 14-ம் தேதி கட்டணம் செலுத்த இறுதிநாள். தேர்வாணைய இணையதளத்தில் இணையவழியாக (ஆன்லைன்) மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஏற்கெனவே நிரந்தரப் பதிவில் பதிவு செய்திருப்பவர்கள் இணைய வழி விண்ணப்பத்தில் அவர் களது பதிவு எண், கடவுச் சொல்லை உள்ளீடு செய்து, இப்பதவிகளுக்கான இதர விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

நிரந்தரப் பதிவு செய்யா தவர்கள் முழு விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.

நிரந்தரப் பதிவு செய்தவர் களுக்கு விண்ணப்பக் கட்ட ணத்தில் இருந்து மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. அவர்களது வகுப்புக்கான சலுகைகளின் அடிப்படையில் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். நிரந்தரப் பதிவு செய்திருப்பது மட்டுமே இப்பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படாது.

விண்ணப்பித்த 2 நாட்களுக்குள் விண்ணப்பக் கட்டணம், தேர்வுக் கட்டணங்களை இந்தியன் வங்கிக் கிளைகள், அஞ்சலகங்களில் செலுத்துச் சீட்டு மூலம் செலுத்திவிட வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம். இதுகுறித்த சந்தேகங்களை 044-25332855, 25332833, கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1800 425 1002 ஆகியவற்றில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x