Published : 25 Jul 2016 11:02 AM
Last Updated : 25 Jul 2016 11:02 AM

கும்மிடிப்பூண்டி அருகே ஒரே நாளில் 5 நாய்கள் கொலை: கொள்ளையர்களின் கைவரிசையா?

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது கவரப்பேட்டை. இங்கு சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அருகிலேயே ரயில் நிலையம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளதால் நாளுக்கு நாள் இங்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், கவரப்பேட்டை யில் சமீப காலமாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக வெளியூர்க ளில் இருந்து வந்து, கவரப் பேட்டையில் தங்கி அங்குள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் மோட்டார் சைக்கிள் கள் அடிக்கடி திருடு போகி றது. அதேபோல் பூட்டியிருக்கும் வீடுகளில் நகை- பணம் திருடப் படுவதும், சாலையில் நடந்துச் செல்லும் பெண்களிடம் சங்கிலி பறிப்பதும் தொடர் கதையாக உள்ளதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி பஸ் நிறுத்தத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட ஒரு போலீஸ்காரரின் கழுத்தில் கத்தியை வைத்து ரவுடிக் கும்பல் ஒன்று மிரட்டி யுள்ளதாகவும் பொதுமக்கள் மத்தியில் கூறப்படுகிறது.

இருப்பினும் இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்கள் பல நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தாலும் திருடர் களுக்கு தொல்லையாகவே இருந்து வந்துள்ளன. அவர்களை அச்சுறுத்தும் வகையில் குரைப் பதால் பொதுமக்கள் எச்சரிக்கை அடைய வாய்ப்பாகவும் அமை கிறது.

இந்நிலையில், அங்குள்ள அருள்நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெருக்களில் சுற்றித்திரிந்த 5 நாய்கள் மர்ம நபர்களால் விஷம் வைத்து கொல்லப்பட்டன. இந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் 5 நாய்களை கொன்றதில் கொள்ளையர்களின் கைவரிசையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே, காவல் துறையினர் நாய்களை கொலை செய்த மர்ம நபர்களை பிடிப்பதோடு, கவரப்பேட்டையில் திருட்டு சம்பவங்கள் தொடராமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x