Published : 12 Apr 2017 09:12 AM
Last Updated : 12 Apr 2017 09:12 AM

விபத்து தொடர்பான ஆவணங்களை இணையதளத்தில் பெறலாம்

விபத்து தொடர்பான அனைத்து ஆவணங் களையும் இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் 5-ம் தேதி வெளியிட்ட உத் தரவில், ‘சாலை விபத்து வழக்குகளில் விரி வான விபத்து அறிக்கையை காப்பீட்டு நிறுவனங்களுக்கும், பாதிக்கப்பட்டவர் களுக்கும், வழக்கில் குற்றம் சாட்டப்பட் டவர்களுக்கும் காவல் துறை வழங்க வேண் டும்’ என்று கூறப்பட்டது. அதன் அடிப்படை யில் மாநில குற்ற ஆவண காப்பகம் https://tnpolice.gov.in என்ற இணையதளம் வழியாக ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய வசதி செய்துள்ளது.

எப்ஐஆர், ஆர்சி, ஓட்டுநர் உரிமம், காப்பீடு சான்றிதழ், வாகனத்தின் தகுதி சான்றிதழ், மாதிரி வரைபடம், மோட்டார் வாகன ஆய்வு அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை, விபத்து பதிவு நகல், காயச் சான்றிதழ், இறுதி அறிக்கை, விரிவான விபத்து அறிக்கை தொடர்பான ஆவணங்கள் போன்றவற்றை இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ள லாம்.

01-03-2017 தேதிக்கு பின்னர் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் ஆவணங்களை இதன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x