Last Updated : 03 Jun, 2017 05:34 PM

 

Published : 03 Jun 2017 05:34 PM
Last Updated : 03 Jun 2017 05:34 PM

கருணாநிதி விரைவில் திமுக தொண்டர்களை சந்திப்பார்: கனிமொழி

திமுக தலைவர் கருணாநிதி விரைவில் திமுக தொண்டர்களை சந்திப்பார் என்று மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழா இன்று (சனிக்கிழமை) மாலை கொண்டாடப்படுகிறது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட திமுக எம்.பி.கனிமொழி செய்தியாளர்களிடம் பேசும்போது, "திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நலமாக உள்ளது. விரைவில் அவர் திமுக தொண்டர்களை சந்திப்பார்" என்றார்.

கருணாநிதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் திமுக தொண்டர்களை கடந்த சில மாதங்களாக பொதுவெளியில் சந்திக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x