Published : 17 Jun 2017 09:40 AM
Last Updated : 17 Jun 2017 09:40 AM

தியாகராய நகர், நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் பராமரிப்பு பணி: 19-ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்

நுங்கம்பாக்கம் போக்குவரத்து சுரங்கப்பாதையில் (லயோலா சுரங்கப்பாதை) பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இந்த பணி வரும் 19-ம் தேதி முதல் 2 மாதங்கள் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து இந்த பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் தியாகராய நகர் மேட்லி சுரங்கப் பாதையில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து இந்த பகுதிகளில் வரும் 19-ம் தேதி முதல் பணி முடியும் வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, வாகன ஓட்டிகள் மேற்கு மாம்பலத்திலிருந்து மேட்லி சுரங்கப்பாதை வழியாக தியாகராய நகர் செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் செல்லலாம். அதில், மாற்றம் இல்லை.

தியாகராய நகரிலிருந்து மேட்லி சாலை வழியாக மேற்கு மாம்பலம் செல்லும் வாகனங்கள் மேட்லி சந்திப்பு - தெற்கு உஸ்மான் சாலை - புதிய போக் சாலை - 70 அடி சாலை - அரங்கநாதன் சுரங்கப்பாதை வழியாகச் செல்லலாம். அல்லது மேட்லி சாலை சந்திப்பு - மேட்லி சாலை - முத்துரங்கன் சாலை - புதிய போக் சாலை - 70 அடி சாலை - அரங்கநாதன் சுரங்கப்பாதை வழியாகச் செல்லலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x