Published : 05 Jul 2016 07:56 AM
Last Updated : 05 Jul 2016 07:56 AM

தமிழ்நாடு வேளாண் பல்கலை. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடக்கம்

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் தில் நடப்புக் கல்வியாண்டுக்கு மாணவர் சேர்க்கைக்கான பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.

கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 20-ம் தேதி வெளியிடப்பட்டது சிறப்பு பிரி வினர்களுக்கான கலந்தாய்வு 27-ம் தேதி நடைபெற்றது. இதை யடுத்து, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கி யது. முதல் நாள் கலந்தாய்வுக்கு மொத்தம் 1084 பேர் அழைக்கப் பட்டிருந்தனர். இதில், ஈரோட்டைச் சேர்ந்த வி.எஸ்.மோகனா, 198.5 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்தார். அவர், கோவை வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பி.டெக் உணவுப் பதப்படுத்துதல் பிரிவை தேர்வு செய்தார்.

ஈரோடு சென்னிமலையை சேர்ந்த எஸ்.கலைபிரியா, 198.25 கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்து 2-ம் இடத்தைப் பிடித்தார். இவர், வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. வேளாண்மை படிப்பைத் தேர்வு செய்தார். திருப்பூர் மாவட் டம், தாராபுரத்தைச் சேர்ந்த எஸ்.தேன்மொழி, 198 கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்து 3-வது இடத் தைப் பிடித்தார் இவரும், வேளாண்மை பல்கலையில் பி.எஸ்சி. வேளாண்மை படிப் பைத் தேர்வு செய்தார். முதல் 7 இடங்களைப் பிடித்த மாண வர்களுக்கு சேர்க்கை ஆணையை தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கி னார். பல்கலை. துணைவேந்தர் ராமசாமி உடனிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x