Published : 11 Jun 2017 11:37 AM
Last Updated : 11 Jun 2017 11:37 AM

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட நீர்நிலைகளை இணைக்க ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு நடத்தப்படும்: அமைச்சர் அன்பழகன் தகவல்

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட் டங்களில் உள்ள நீர்நிலைகளை இணைப்பது குறித்து ஆளில்லா சிறிய விமானம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் இந்திய ஆட்டோ மோட்டிவ் பொறியியல் சொசைட்டி ஆகியவை இணைந்து தேசிய அளவிலான ஆளில்லா சிறிய விமானங்கள் வடிவமைப்பு மற்றும் செயல் முறை போட்டிகளை நடத்தின. இப்போட்டியில் நாடு முழு வதும் பல்வேறு கல்லூரி களைச் சேர்ந்த 600 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

அமைச்சர் கே.பி. அன்பழ கன் இதில் பங்கேற்று மாண வர்களுக்கு பரிசுகளை வழங் கினார். இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை செயலாளர் சுனில் பாலிவால், பல்கலைக் கழக பதிவாளர் எஸ். கணேசன், கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வர் கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச் சர் அன்பழகன் பேசியதாவது:

மணிமேகலை, சிலப்பதி காரம், ராமாயணம் ஆகியவற் றில் விமானங்கள் குறித்த குறிப்புகள் கிடைக்கின்றன. இன்று விமான தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. அதேபோல உலகம் முழுவதும் ஆளில்லா விமானங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு முக்கியத் துவம் கொடுக்கப்படுகிறது. ஆளில்லா சிறிய விமானங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு மட்டு மல்லாமல், பொதுமக்களுக் கும் பயன்பட வேண்டும்.

நீர்நிலைகளை இணைக்க..

கிருஷ்ணகிரி மாவட்டம் கேஆர்பி அணையில் இந்த வறட்சி காலத்திலும் 47 அடி வரை தண்ணீர் உள்ளது. அணையின் மொத்த நீர்மட்டம் 52 அடிகள்தான். இந்த தண் ணீரை தருமபுரி மாவட்டத் துக்கும் பயன்படுத்தும் வகை யில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளை இணைக்க வேண்டும்.

இந்த திட்டத்தை செயல் படுத்துவது தொடர்பான ஆய்வை ஆளில்லா சிறிய விமானம் மூலம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற் காக அண்ணா பல்கலைக் கழகம் தயாரித்த ஆளில்லா சிறிய விமானம் பயன்படுத் தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் வெற்றி பெற்றால் பிற மாவட்டங்களிலும் ஆளில்லா சிறிய விமானங்கள் பயன் படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x