Published : 25 Mar 2014 12:00 AM
Last Updated : 25 Mar 2014 12:00 AM

சமூகநலத் துறை பள்ளியில் ‘தாரகை குழந்தைகள் கழகம்’

குடும்பச் சூழ்நிலை காரணமாகப் பணம் கொடுத்துப் பள்ளி செல்ல முடியாதவர்கள், பெற்றோரை இழந்தவர்கள், குழந்தைத் தொழிலாளர்கள் எனப் பல்வேறு சமூகப் பின்னணியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகளுக்காக குழந்தைகள் நலக்குழுமத்தை சமூகநலத் துறை அமைத்துள்ளது.

அக்குழுமத்தால் சென்னை புரசைவாக்கத்தில் நடத்தப்பட்டு வரும் சிறுமிகளுக்கான அரசு குழந்தைகள் இல்லத்தில் 230 மாணவியர் படிக்கின்றனர்.

1 முதல் 10 வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் சுமார் 230 மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களிடம் தன்னம்பிக்கை மற்றும் தலைமைப் பண்புகளை வளர்க்கும் விதத்தில் ‘தாரகை குழந்தைகள் கழகம்’ என்ற அமைப்பைச் சென்னை சமூகப் பணி கல்லூரி (mssw) தொடங்கியுள்ளது.

இந்த தாரகை குழந்தைகள் கழகத்தில் கல்விக் குழு, உடல்நலம் - சுகாதாரம், பாதுகாப்பு - ஒழுக்கம், விளையாட்டு- பொழுதுபோக்கு, உணவு- ஊட்டச்சத்து ஆகிய பிரிவுகளுக்கு 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பள்ளி மாணவிகள் 15 பேரைக் கொண்டு அமைக்கப் பட்டுள்ள இந்தக் குழுவில் தலைவர், செயலாளர், பொருளாளர் போன்ற பதவிகள் உருவாக் கப்பட்டு மாணவிகள் தலைமை பொறுப்புகளில் உள்ளனர்.'

தாரகை குழந்தைகள் கழகம்' தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சமூகப் பாதுகாப்பு துறையின் திட்டக் குழு அதிகாரி காளியம்மா பேசுகையில்,

‘‘மற்ற பள்ளிகளில் இருந்து மாறுபட்ட சூழ்நிலையில் சிறுமியர் அரசு குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. தற்போது தொடங்கப்பட்டுள்ள தாரகை குழந்தைகள் கழகம் இங்குள்ள குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்க்க உதவும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x