Published : 10 Aug 2016 08:36 AM
Last Updated : 10 Aug 2016 08:36 AM

3 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடப் புத்தகத்துடன் ஆங்கில இலக்கண பயிற்சித்தாள்: அமைச்சர் பெஞ்சமின் அறிவிப்பு

மொழித்திறன் மேம்பாட்டுக்காக 3 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில இலக் கண பயிற்சித்தாள்கள் பாடப் புத்தகத்துடன் இணைத்து வழங்கப் படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பி.பெஞ்சமின் அறிவித் துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:

பள்ளி கல்வித்துறைக்கு கடந்த 5 ஆண்டுகளில் 86,193 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி யாண்டுடன் சேர்த்து ரூ.1.10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான நலத்திட்டத் துக்காக ரூ.15,474.87 கோடி ஒதுக் கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான சிறப்பு ஊக்கத்தொகை திட்டத் தின் கீழ் ரூ.1,810 கோடி மாணவர் கள் வங்கிக்கணக்கில் இருப்பு வைக் கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக இந்த ஆண்டு ரூ.381 கோடி ஒதுக் கப்பட்டுள்ளது.

ஆங்கில மொழி அவசியம் என்பதை கருத்தில்கொண்டு, அரசுப் பள்ளிகளில் தொடக்கக் கல்வியில் 2012-13ம் ஆண்டு முதல் ஆங்கில வழி பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது வரை 3 லட்சத்து 95 ஆயிரத்து 858 மாணவர்கள் இதில் சேர்ந்து பயன் பெற்றுள்ளனர்.

ஆசிரியர் பணியிடங்களை பொறுத்தவரை 79,354 பணியிடங் கள் ஒப்புவிக்கப்பட்டு, 74,316 பணியிடங்கள் பணி மூப்பு மற் றும் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 353 பேருக்கு கல்வி, உதவி உபகரணங்கள் ரூ.32.15 கோடியில் வழங்கப்படும். கல்வியில் பின்தங் கிய ஒன்றியங்களில் செயல்படும் 44 மாதிரி பள்ளிகளுக்கு ரூ.4 கோடியில் கணினி மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும். விடுப்பு எடுக்காத மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்று வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள 93 பகுதி நேர நூலகங்கள் ஊர்ப்புற நூலகங்களாக தகுதி உயர்த்தப்படும். இதற்கென நூலகர் பணியிடங்கள் உருவாக்கப்படும்.

சென்னை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஆங்கில வழியில் தொடக்க கல்வி பட்டயப்படிப்பு தொடங்கப்படும். இதில், 50 மாணவர்கள் ஆண்டு தோறும் பயன்பெறுவர். பள்ளி மாணவர்களின் மொழித்திறன் மேம்பாட்டுக்காக 3 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர் களுக்கு ஆங்கில இலக்கண பயிற்சித்தாள்கள் பாடப்புத்தகத் துடன் இணைத்து வழங்கப்படும். அரசு தேர்வு இயக்ககத்தில் தேர்வு பணிகளை மேற்கொள்ள தனிப்பிரிவு அமைக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x