Published : 10 Mar 2017 08:55 AM
Last Updated : 10 Mar 2017 08:55 AM

நிலங்களை விட அதிகம் கிடைக்கும்: கடலோரப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கலாம் - பொறியாளர் ஏ.சி.காமராஜ் யோசனை

நீர் மேலாண்மை பொறியாளரும், நவீன நீர்வழிச்சாலை பேரியக்கத் தலைவருமான ஏ.சி.காமராஜ் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம் போன்ற மாவட்டங் களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல் படுத்துவதால் நிலத்தடி நீர் பாதிக் கும். விவசாய நிலங்கள் அழியும் என்பதால் புதுக்கோட்டை நெடு வாசலில் எதிர்ப்பு தெரிவித்து மக் கள் போராடி வருகின்றனர். அவர் களது போராட்டம் நியாயமானதே.

ஹைட்ரோ கார்பன் உபயோகத் தில் 4-வது பெரிய நாடாக இந்தியா உள்ளது. நமது எரிசக்தி பயன்பாட்டில் ஹைட்ரோகார்பன் பெரும் பங்கு வகிக்கிறது. அதே நேரம், நிலத்தில் இருப்பதைவிட சுமார் 2 மடங்கு ஹைட்ரோ கார்பன் இந்தியக் கடலோரப் பகுதியில் உள்ளது. எனவே, விவசாய நிலங்களைத் தவிர்த்து கடலோரப் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தினால் யாருக்கும் பாதிப்பு வராது.

ஏற்கெனவே தண்ணீர் இல்லா மல் தமிழகம் தவித்து வருகிறது. விவசாயமும் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளது. விவசாயிகள் தற் கொலை செய்துகொள்ளும் அவ லம் ஏற்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் தர கர்நாடகாவும் மறுக் கிறது. மேகேதாட்டுவில் அணை கட்டிவிட்டால், தமிழகத்துக்கு கிடைக்கும் நீரின் அளவு இன்னும் குறையும்.

நீர்வழிச்சாலை திட்டம்

வெள்ள பாதிப்பு, வறட்சி ஆகிய இரு பிரச்சினைகளுக்கும் நவீன நீர்வழிச்சாலை திட்டம்தான் ஒரே தீர்வு. தமிழகத்தில் மட்டும் ஆண்டுதோறும் 177 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதைத் தேக்கி ‘தமிழ்நாடு நவீன நீர்வழிச்சாலை’ என்ற திட்டத்தை செயல்படுத்தினால் தமிழகத்தின் குடிநீர் பஞ்சம் தீரும். நிலத்தடி நீர்மட்டம் உயரும். பாசனத்துக்கு போதிய நீர் கிடைக்கும். விவசாயம் செழிக்கும். வேலைவாய்ப்பு பெருகும்.

மிகவும் சிக்கனமானது

அத்துடன், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்கள் மூலமாக கிடைக்கும் பலனைவிட பல மடங்கு பலன்களை நவீன நீர்வழிச் சாலைகள் மூலம் பெறமுடியும். நவீன நீர்வழிச்சாலையில் நீர் வழிப் போக்குவரத்து அதிகரிக்கும் போது ஹைட்ரோ கார்பன் எரிபொருள் தேவை குறையும். சாலைப் போக்குவரத்தைவிட நீர்வழிப் போக்குவரத்து மிகவும் சிக்கனமானது. அத்துடன், நீர்மின்சாரமும் கிடைக்கும். இதனால் எரிபொருள் இறக்குமதி குறையும். பொருளாதாரமும் முன்னேற்றமடையும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x