Last Updated : 04 Jan, 2017 08:48 AM

 

Published : 04 Jan 2017 08:48 AM
Last Updated : 04 Jan 2017 08:48 AM

புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மரங்கள் நட வல்லுனர் குழு தேவை: தாவரவியல் பேராசிரியர் து.நரசிம்மன் வலியுறுத்தல்

புயலால் பாதிக்கப்பட்டு மரங்கள் விழுந்த இடங்களில் நாட்டு மரங்களை வளர்ப்பது தொடர்பாக வல்லுனர் குழு அமைத்து, மத்திய அரசின் நிதியைப் பெற்று பணிகளை மேற்கொள்ளலாம் என தாவரவியல் பேராசிரியர் து.நரசிம்மன் தெரிவித்துள்ளார்.

‘வார்தா’ புயல் தாக்குதலில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் சாய்ந்தன. இழந்த பசுமைப் பரப்பை மீட்க, உடனடியாக நிதி ஒதுக்கி பணிகளை இப்போதே தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பாதிப்புகளை தாங்கும் நாட்டு மரங்களை வளர்ப்பதோடு, அழியும் நிலையில் உள்ள கடல் வன மர வகை களை மீண்டும் உயிர்பெறச் செய்தால், அடுத்த 10 ஆண்டுகளில் மீண்டும் பசுமைப் பரப்பை பழைய நிலைக்கு கொண்டு வர முடியும் என்று தாவரவி யல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக சென்னையில் மரங்கள் தொடர்பான கணக்கெடுப்பை நடத்தியவரும், சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் தாவரவியல் இணை பேராசிரியருமான து.நரசிம்மன் ‘தி இந்துவிடம்’ கூறியதாவது:

மரங்கள் அடர்ந்த பகுதிகள், கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் மட்டும், அரிய வகை மரங்கள் உட்பட ஒன்றரை லட்சம் மரங்கள் உள்ளன. புயல் தாக்குதலில் இப்பகுதிகளில் மட்டும் 30 ஆயிரம் மரங்களுக்கு மேல் சாய்ந்துவிட்டன.

இந்த மரங்கள் ஆங்கிலேயர் காலத் தில் தான் தமிழகத்தில் கொண்டு வந்து நடப்பட்டன. அழகுக்காக நடப்பட்ட இந்த மரங்கள், தற்போது அதிகள வில் பரவிவிட்டன. அழகுக்காக நடப் பட்டவை, புயலுக்கு தாக்குப்பிடிப்ப தில்லை. சில இடங்களில் புளி, வேம்பு மரங்களும் விழுந்துள்ளன. அவை மிகவும் பழமையான மரங்களாகவும், வலுவிழந்ததாகவும் இருந்தன.

புயலுக்கு தாக்கு பிடிக்கும் நாட்டு மரங்களை கண்டுபிடித்து அவற்றை நட்டு பராமரிக்க வேண்டும். குறிப்பாக, உலர் பசுமை காடுகளில் வளரும் கடல் புன்னை, வெண்ணாங்கு, அழிஞ்சில், எட்டி, குருந்தமரம், பாதாம் மரம், பூவரசு உள்ளிட்ட 300 வகையான மர வகைகளை நடலாம்.

இந்த மரங்களின் விதைகளை சேமித்து தற்போது, பல்வேறு அமைப்புகள் நாற்று தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளன. இவர்களி டம் இருந்து நாற்றுக்களை வாங்கி பயன்படுத்தலாம்.

அதேநேரம், எந்த வகை மரங்களை நடுவது, அவற்றை பராமரிப்பது யார் என்பதைப் பற்றி முடிவு செய்ய, வல்லுநர்கள், துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை அரசு அமைக்க வேண்டும். நிதி போதுமான அளவுக்கு ஒதுக்கப்பட வேண்டும். குறிப்பாக, காடு வளர்ப்பு இழப்பீடு நிதிமேலாண்மை மற்றும் திட்டக்குழுமம் எனப்படும் கேம்பா (compensatory afforestation fund management and planning authority- campa) என்ற மத்திய அரசின் திட்டத்தில் இருந்து நிதியைப் பெற்று மரவகைகள் நடலாம் என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x