Published : 25 Apr 2017 07:51 AM
Last Updated : 25 Apr 2017 07:51 AM

அரசு ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்: தமிழகம் முழுவதும் 4.5 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள்

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்வது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதில் தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 50 ஆயிரம் அரசு ஊழியர்கள் கலந்துகொள் கிறார்கள்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் மு.சுப்பிரமணியன், மாநிலப் பொதுச்செயலாளர் மு.அன்பரசு ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2011-ம் ஆண்டு தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறை வேற்றாத சூழலில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தினோம். இந்தப் போராட்டம், சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்குப் பின்னர் முடிவுக்கு வந்தது. இந்த அறிவிப்புகளில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்வது குறித்து பரிசீலனை செய்ய வல்லுநர் குழு அமைப்பு, 8-வது ஊதியக்குழு அமைத்து அரசு ஊழியர்களின் ஊதிய பிரச்சினையை தீர்ப்பது போன்றவை குறிப்பிடத்தக்கது. பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பு களுக்கு அரசாணைகளை வெளியிடக் கோரி கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னர் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்துவிட்டு பழைய பென்ஷனை அமைப்பதற்கான வல்லுநர் குழுவை அமைத்தார்.

30 ஆண்டுகளாக பணிபுரியும் சத்துணவு ஊழியர்கள், அங்கன் வாடி ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் என சுமார் 3 லட்சம் பேர் வரையறுக்கப்படாத ஊதியத்தின் கீழ் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஊதிய உயர்வுடன் வரையறுக்கப் பட்ட ஓய்வூதியமும் அளிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக் கப்பட்டது. அந்த வாக்குறுதிகள் இன்றுவரை நிறைவேற்றப் படவில்லை.

அரசின் அழைப்பு இல்லை

எந்த நிலையிலும் அரசிடமிருந்து பேச்சுவார்த்தைக்கான அழைப்பு வரவில்லை. எனவே, வேறு வழியில்லாமல் 25-ம் தேதி (இன்று) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x