Published : 17 Feb 2014 10:18 AM
Last Updated : 17 Feb 2014 10:18 AM

சத்தியமங்கலம் வனப்பகுதியில் மர்மமாக இறந்து கிடந்த புலி

சத்தியமங்கலம் வனப்பகுதியில் மர்மமான முறையில் புலி இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி தேசிய புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள உயிர் சூழல் புலிகள் வாழ்வதற்கு ஏற்றவகையில் இருப்பதால், இந்த வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஆசனூர் வனக்கோட்டம், தாளவாடி வனச் சரகம், சிக்கள்ளி காவல் பகுதி, மூக்கன்பாளையம் டேம் சரகத்தில் வன அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டபோது, மூங்கில் புதருக்குள் ஒரு புலி இறந்து கிடப்பதைக் கண்டுபிடித்தனர்.

இறந்து கிடந்த புலிக்கு 15 வயதுக்கு மேல் இருக்கும் என கருதப்படுகிறது. வயதான காரணத்தினால் புலி இறந்துள் ளதாக ஆரம்பக் கட்ட ஆய்வில் தெரியவருகிறது.

புலி இறந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆனதால் பாலினம் கண்டுபிடிக்க இயலவில்லை. சம்பவ இடத்திலேயே புலியை பிரேதப் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கள இயக்குநர் மற்றும் வனப்பாதுகாவலரின் உத்தரவுப்படி விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் சந்தேகப் படும்படியான காரணங்கள் ஏதும் தற்போதைய நிலையில் இல்லை என வனத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலி நகங்களுடன் 3 பேர் சிக்கினர்

இந்நிலையில், மத்திய வனப்பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு வனப்பாதுகாப்பு படையினர் ஆசனூர் பங்களாத் தொட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி திரிந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் புலி நகங்கள் மற்றும் புலி பற்களை கடத்த முயன்றது தெரியவநத்து. பிடிபட்ட சேகர், சாந்தன், செல்வன் ஆகியோரை வனப்பாதுகாப்புபடையினர் ஆசனூர் வனச்சரக அலுவலர் (பொறுப்பு) பெர்னாட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தாளவாடியில் புலி இறந்த சம்பவத்தில் இவர்களுக்குத் தொடர்பு உள்ளதா? என வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், வனப்பகுதியில் இறந்த நிலையில் புலி கண்டறியப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x