Published : 11 Dec 2013 10:00 AM
Last Updated : 11 Dec 2013 10:00 AM

காஞ்சிரம்: பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண் லாரி உரிமையாளர்கள்

காஞ்சிபுரத்தில் மணல் வாங்க லாரி உரிமையாளர் மற்றும் அவர்களது குடும்பத்தாரை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பெண் லாரி உரிமையாளர்கள் பொதுப் பணித்துறை அலுவலகத்தை செவ்வாய்க்கிழமையன்று முற்றுகையிட்டனர்.

காஞ்சிபுரம் பழையசீவரத்தில் மாவட்ட நிர்வாகம் முடக்கிய மணல் கிடங்கிலுள்ள 40 ஆயிரம் லோடு மணலை விற்பனை செய்யும் பணியைப் பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. தற்போது 30 ஆயிரம் லோடுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.8.28 கோடி அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. மணல் விண்ணப் பித்தோருக்கு திங்கள்கிழமை வரை 10,985 லோடு மணல் வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மதுராந்தகம் அடுத்த கள்ளபிரான்புரத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 59 ஆயிரம் லோடு மணலை விற்பனை செய்ய லாரி உரிமையாளர்களிடம் இருந்து மணலுக்கான

கட்டணம் வரைவோலையாக திங்கள்கிழமை முதல் பெறப்பட்டு வருகிறது.

மணலுக்கு விண்ணப்பிக்க அதிக மக்கள் குவிந்ததையடுத்து, பெண்களின் கோரிக்கைகளுக்கு இனங்க அவர்களுக்குத் தனி வரிசை அமைக்கப்பட்டது. இருப்பினும் கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்துகொண்டிருந்தது. இவர்களை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர்.

ஒரு ஆர்.சி.புக்கை நகலெடுத்து பலர் கொண்டுவந்து, ஆண்கள் வரிசை மற்றும் பெண்கள் வரிசையில் நின்று ரூ.1,500 வரை கூலி பெறுகின்றனர். இதனால் அசல் ஆர்.சி.புக் வைத்திருப்போருக்கு மணல் கிடைப்பதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. அசல் ஆர்.சி.புக் கட்டாயமாக்கப்பட்டால் கூட்டம் குறையும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த டிசம்பர் 9-ம் தேதி முதல் ஆர்.சி.புக் கட்டாயம் என்று பொதுப்பணித்துறை அறிவித்தது. இதனால் கூட்டம் சற்று குறைந்தது.

இந்நிலையில் லாரி உரிமை யாளர்களுக்கு பதில், அவர் அனுமதிக்கும் சார்பாளர்கள், தினமும் வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இவர்களை மீறி மணல் வாங்க முடியாத பெண் லாரி உரிமையாளர்கள் சிலர் காஞ்சிபுரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தைச் செவ்வாய்க் கிழமை முற்றுகையிட்டு, உண்மை யான லாரி உரிமையாளர்களுக்கு மட்டுமே மணல் வாங்க அனுமதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x