Published : 13 Oct 2014 09:54 AM
Last Updated : 13 Oct 2014 09:54 AM

எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் 96வது பிறந்தநாள்: கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட 3 பேருக்கு விருதுகள் - எம்.ஏ.சி. அறக்கொடை நிறுவனம் வழங்கியது

டாக்டர் எம்.ஏ.சிதம்பரம் செட்டியா ரின், 96வது பிறந்தநாள் விழாவில், கவிஞர் வைரமுத்து, தமிழாசிரியர் ஆனந்தராசன் மற்றும் தொழிலதிபர் ராம் பிரசாத் குருநாதன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

எம்.ஏ.சி. அறக்கொடை நிறுவனத்தின் சார்பில், டாக்டர் எம்.ஏ.சிதம்பரம் செட்டியாரின் 96வது பிறந்தநாள் விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா, ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவை தேவகி முத்தையா குத்து விளக்கேற்றித் தொடங்கிவைத்தார்.

தொழிலதிபர் டாக்டர் ஏ.சி.முத்தையா வரவேற்புரை நிகழ்த் தினார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியாவில் 65 சதவீதம் இளைஞர்கள் இருக்கிறார் கள். இதுதான் இந்தியாவின் பலம். நாட்டின் வளர்ச்சியில் எம்.ஏ.சி.அறக்கொடை நிறுவனம் பல்வேறு வகை சமூகப் பணிகளை செய்து வருகிறது. கல்வி நிலையங்கள், இசைக்கல்லூரி, தொழில்துறை ஆகியவை மட்டுமின்றி, கிராமங் களில் இளைஞர்களுக்கு தொழிற் பயிற்சி மையங்கள், மாலைநேரக் கல்விக் கூடங்கள், கிராமங்களில் சூரிய சக்தி விளக்குகள் அமைத் தல் எனப் பல பணிகளைச் செய்து வருகிறோம். பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தைப் போல், கிராமங்களில் கழிவறைகள் ஏற்படுத்திக் கொடுத்து, சுகாதாரம் பேணும் திட்டங்களையும் எம்.ஏ.சி அறக்கொடை நிறுவனம் மேற் கொண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து, விருது பெறுவோரை தேவகி முத்தையா வும், அஸ்வின் முத்தையாவும் அறிமுகப்படுத்திப் பேசினர். உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் விருது களை வழங்கினார்.

தமிழ்மொழி வளர்ச்சிக்கு பணிகளை மேற்கொண்டு வரும் மதுரை தியாகராஜர் கல்லூரி முன்னாள் பேராசிரியர் ஆ.ஆனந்த ராசனுக்கு, டாக்டர் ராஜா சர்.அண்ணாமலைச் செட்டியார் விருதும், சினிமா மற்றும் இலக்கியத் துறையில் புகழ் பெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கு டாக்டர் எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் விருதும், அமெரிக்காவில் வாழும் இந்தியத் தொழிலதிபர் ராம் பிரசாத் குருநாதனுக்கு, டாக்டர் ஏ.சி.முத்தையா விருதும் வழங்கப் பட்டன.

முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் விருதுகளை வழங்கி பேசியதாவது:

எம்.ஏ.சிதம்பரம் செட்டியார், தொழிலதிபர்களுக்கு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர் ஆவார். சர்க்கரை ஆலை, எஃகு ஆலை, கப்பல் தொழில், உரத்தொழிற்சாலை என அனைத்து தொழில்களிலும் பெரும் வளர்ச்சி கண்டவர். கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் மிக்கவர்.

அவரைத் தொடர்ந்து அவரது மகன் ஏ.சி.,முத்தையா, தங்கள் குடும்பத்தின் கலை, இலக்கிய, தொழில் வளர்ச்சிப் பணிகளை சிறப்பாகத் தொடர்ந்து வருகிறார். அவர்கள் குடும்பத்தினரின் பெயரிலான விருதைப் பெறுவோ ருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

கங்கை சுத்தமாக

இந்நிகழ்சியில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:

அண்ணாமலை செட்டியாரின் நகரத்தார் குடும்பம், கலை, இலக்கியம், பண்பாடு, தொழில், மொழி என அனைத்து வளர்ச்சி களுக்கும் பாடுபட்டுள்ளது. எனது 16 வயதில் நான் தமிழை, தமிழின் பெருமையை கவிஞர் கண்ணதாசன் வழியே கற்றேன்.

இந்த நாடு மேம்பட வேண்டுமென்றால் இலக்கியம் சொல்வதைக் கேட்க வேண்டும். மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை நான் வரவேற்கிறேன். ஆனால், அரசாங்கம் மட்டும் அதை செய்தால் ஒரு கை ஓசை போன்றதாகி விடும்.

மக்களி டமிருந்து இதற்கு ஒத்துழைப்பு வரவேண்டும். கங்கையை சுத்தம் செய்ய ஒரு யோசனை கூறுகிறேன். கங்கையி லிருந்து மதத்தை அப்புறப்படுத்தி விடுங்கள். கண்டிப்பாக கங்கை சுத்தமாகி விடும். அங்கே மதத்தை அனுமதிப்பதால், புனிதமான கங்கை நீர் மனிதர்களால் பாழாகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

டாக்டர் எம்.ஏ.சி.அறக்கொடை நிறுவனச் செயலாளர் பி.வேதகிரி நன்றி உரையாற்றினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x