Published : 05 Jan 2016 08:23 AM
Last Updated : 05 Jan 2016 08:23 AM

நாங்கள் மட்டும்தான் சாதிக் கட்சியா?- பாமக அரசியல் மாநாட்டில் ராமதாஸ் கேள்வி

எத்தனையோ சாதிக் கட்சிகள் இருக்கும்போது, நாங்கள் மட்டும்தான் சாதிக் கட்சியா? இனி பாமகவை சாதிக் கட்சி என்று யாரும் அழைக்க வேண்டாம் என அதன் நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

விழுப்புரம் அருகே உள்ள பூத்தமேடில் நேற்று முன்தினம் இரவு பாமக கிழக்கு மண்டல அரசியல் மாநாடு நடைபெற்றது. கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:

எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் ஓடிச் சென்று போராட்டம் நடத்து பவன் நான். எங்களைப் போல் மக்களுக்காக போராட்டம் நடத்தி யவர்கள் உண்டா? வரும் 11-ம் தேதி ஊட்டியில் போராட்டம் நடத்த உள்ளேன். அங்கு ஓய்வெடுக்கச் செல்லவில்லை. தேயிலை விவசாயி களுக்காக போராடப் போகிறேன். நாங்கள் பலமுறை பதில் தந்த போதிலும், சாதிக் கட்சி என்றழைக் கின்றனர்.

நாங்கள் தமிழகத்தில் உள்ள 370 சாதிகளுக்குமான கட்சி. அனை வருக்கும் இட ஒதுக்கீடு கோரி போராடி வருகிறோம். எனவே, இனிமேல் சாதிக்கட்சி என்று அழைக்க வேண்டாம். அண்மையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலிலும் சாதிதான் வென்றது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் சாதியால்தான் பிளவு ஏற்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், புதிய நீதிக்கட்சி போன்றவை சாதிக் கட்சிகள் இல்லையா? பாமகதான் சாதிக்கட்சியா? கடந்த 1980-ல் சமூக அமைப்பைத் தொடங்கியபோது, மக்கள் விகிதாசாரப்படி அனைத்து தரப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தினோம். தாழ்த் தப்பட்டவர்களுக்கு 18 முதல் 22 சத வீதம், வன்னியர்களுக்கு 20 சத வீதம் என்று கோரிக்கை வைத் தோம். போராட்டத்தில் 21 பேர் உயிரி ழந்தனர். அதன் பயனாக 109 சாதிகள் இட ஒதுக்கீட்டை பெற்றன.

இன்றைய நிலையில் 40 சதவீதம் ஓட்டுகள் உள்ளன. நாங்கள் எடுத்த கருத்துக்கணிப்பின்படி 100 தொகுதிகளில் வெற்றி நிச்சயம் என்று அவர் தெரிவித்தார்.

கூட்டணிக்கு யாரும் வரலாம்

மாநாட்டில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி பேசும்போது, ‘தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். மாற்றத்தை நீங்கள் கொடுத்தால், முன்னேற்றத்தை நாங்கள் கொடுப்போம். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் 50 ஆண்டுகளில் செய்வதை 5 ஆண்டுகளில் செய்து முடிப்பேன். அதற்கான திட்டங்கள் உள்ளது.

இங்கு நேர்மையான அதிகாரிகள் முடக்கப்பட்டுள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய வெளிப்படையான நிர்வாகத்தை ஏற்படுத்துவோம். மின் ஆளுமை, தரமான மருத்துவம், தரமான கல்வி வழங்குவோம். முழு மதுவிலக்கை அமல்படுத்துவது உறுதி. எங்களுடன் கூட்டணிக்கு எந்த கட்சி வந்தாலும் மகிழ்ச்சி’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x