Published : 09 Feb 2017 08:55 AM
Last Updated : 09 Feb 2017 08:55 AM

அதிமுக அரசியல் - தவிப்பில் தமிழகம்: அடுத்தடுத்து திருப்பங்கள்..

பிப்ரவரி 7

* காலை 11 முதல் மதியம் 1 மணி வரை சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன், அவரது மகன் மனோஜ்பாண்டியன் ஆகியோர் அண்ணா நகர் இல்லத்தில் பரபரப்பு பேட்டி

* மதியம் 2 மணி: பி.எச்.பாண்டியன் குற்றச்சாட்டுக்கு அதிமுக மூத்த தலைவர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், கே.ஏ.செங்கோட்டையன் பதில்.

* மதியம் 3.30: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் பேட்டி.

* இரவு 8.50: மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருகை.

* 9.39 வரை கண்களை மூடி தியானத்தில் அமர்ந்திருந்தார் ஓ.பன்னீர்செல்வம்.

* 9.40: பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்க தொடங்கினார் ஓ.பன்னீர்செல்வம்.

* 9.40: ஓ.பன்னீர்செல்வம் பேட்டியைத் தொடர்ந்து பரபரப்பானது போயஸ் தோட்டம்.

* 9.50: எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஒருவர் பின் ஒருவராக போயஸ் தோட்டம் வரத்தொடங்கினர்.

* 10.21: பேட்டியை நிறைவு செய்தார் ஓ.பன்னீர்செல்வம்.

* 10.45: பேரவைத் தலைவர் தனபால் போயஸ் தோட்டம் வருகை.

* 11.00: முதல்வர் பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு சென்று அதிமுக எம்.பி. மைத்ரேயன் ஆதரவு.

* 11.15: மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை போயஸ் தோட்டம் வருகை.

* 11.17: அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தீவிர ஆலோசனை.

* 12.20: தொண்டர்கள் போயஸ் தோட்ட இல்லத்தின் முன்பு திரள போலீஸார் அனுமதி.

* 12.39: அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி சசிகலா உத்தரவு.

* 12.50: ஆலோசனை கூட்டம் முடிந்து போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து முதல் ஆளாக தம்பிதுரை வெளியே வந்தார்.

* 1.15: போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து வெளியே வந்து சசிகலா பேட்டி.

* 1.45 மணி முதல்: சசிகலாவின் குற்றச்சாட்டு குறித்து ஊடகங் களுக்கு ஓ.பன்னீச்செல்வம் கிரீன் வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் பேட்டி.

பிப்ரவரி 8

* காலை 10 மணி: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எம்எல்ஏக்கள் வரத் தொடங்கினர்.

* 10.45: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு தனது இல்லத்தில் பேட்டி. பேட்டியின்போது பி.எச்.பாண்டியன், மைத்ரேயன் எம்.பி. உடனிருந்தனர்.

* 11.30: சசிகலா கட்சித் தலைமை அலுவலகம் வருகை. எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது.

* மதியம் 12.55: எம்எல்ஏக்கள் கூட்டம் நிறைவடைந்தது.

* 1.00: போயஸ் தோட்டத்துக்கு திரும் பினார் சசிகலா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x