Last Updated : 10 Apr, 2017 09:27 AM

 

Published : 10 Apr 2017 09:27 AM
Last Updated : 10 Apr 2017 09:27 AM

ஜெ. கைரேகை பெற பணம் எதுவும் வாங்கவில்லை: அமைச்சர் தந்த ரூ.5 லட்சம் லண்டன் டாக்டரின் ஹோட்டல் கட்டணம்- அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜி விளக்கம்

‘‘ஜெயலலிதாவிடம் கைரேகை வாங்கியதற்கு பணம் எதையும் பெறவில்லை. அமைச்சர் கொடுத் தனுப்பிய ரூ.5 லட்சம், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே தங்கிய ஹோட்டல் கட்டணம்தான்’’ என்று சென்னை அரசு பொது மருத்துவ மனை டாக்டர் பி.பாலாஜி தெரிவித் தார்.

மறைந்த முதல்வர் ஜெய லலிதா, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது தஞ்சாவூர், அரவக் குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. அதிமுக வேட்பாளர்களின் படிவம் -ஏ மற்றும் படிவம்-பி ஆகியவற்றில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லை. அதற்கு பதிலாக அவரு டைய பெருவிரல் ரேகை (கை நாட்டு) பதிவு செய்யப் பட்டிருந்தது.

இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதுடன், பெரும் பரபரப் பையும் ஏற்படுத்தியது. இதை யடுத்து ஜெயலலிதாவிடம் பெரு விரல் ரேகையை பதிவு செய்த சென்னை அரசு பொது மருத்துவ மனை டாக்டர் பி.பாலாஜி கூறும் போது, ‘‘ஜெயலலிதாவின் கையில் மருந்துகள் செலுத்தப்படுவதால் கடும் வலி இருக்கிறது. அவரால் கையெழுத்து போட முடியவில்லை. அதனால், அவரிடம் பெருவிரல் ரேகை வாங்கப்பட்டது. ஜெயலலிதா சுயநினைவோடுதான் தன்னுடைய பெருவிரல் ரேகையை பதிவு செய்தார்’’ என்று தெரிவித்தார்.

வருமானவரி சோதனை

இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சமக தலைவர் சரத்குமார், முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கீதாலட்சுமி வீடு உட்பட தமிழகம் முழுவதும் 55 இடங்களில் வருமானவரித் துறையினர் கடந்த 7-ம் தேதி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது ரூ.4.50 கோடி கைப்பற்றப்பட்டது.

மேலும், ஆர்.கே.நகர் தொகுதி யில் உள்ள 2 லட்சத்து 24 ஆயிரத்து 145 (85 சதவீதம்) வாக்காளர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.89 கோடியே 65 லட்சத்து 80 ஆயிரம் பணப் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களை வருமானவரித் துறை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அந்த ஆவணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட அமைச்சர்களின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

மற்றொரு ஆவணத்தில் 2016-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர் பாலாஜிக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை வைத்து, ‘ஜெயலலிதாவின் பெரு விரல் ரேகையை பதிவு செய்தவர் டாக்டர் பாலாஜி. அதற்காக அவருக்கு ரூ.5 லட்சம் கொடுக்கப் பட்டுள்ளது’ என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை டாக்டர் பாலாஜி மறுத்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, 4 முறை சென்னை வந்தார். முதல் 3 முறை அவர் தனியாக வந்தபோது, தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கினார். அக்டோபர் 23-ம் தேதி 4-வது முறையாக வந்தபோது, அவருடன் குடும்பத்தினரும் வந்திருந்தனர். அதனால், அவரை ரெயின் ட்ரீ ஹோட்டலில் தங்குமாறு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது. ஆனால், அவர் தாஜ் கோரமண்டல் ஹோட்டலிலேயே தங்கினார்.

நவம்பர் 2-ம் தேதி அதிகாலை அவர் லண்டன் புறப்பட இருந் தார். அவர் தங்கியதற்கான ஹோட் டல் கட்டணத்தை நவம்பர் 1-ம் தேதி செலுத்த வேண்டும். அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தினரோ, ‘நாங்கள் ரெயின் ட்ரீ ஹோட்டலில் தான் தங்கச் சொல்லியிருந்தோம். அவர் ஏன் தாஜ் கோரமண்டலில் தங்கினார். அதனால், நாங்கள் கட்டணத்தை செலுத்த முடியாது’ என்று தெரிவித்தனர்.

இதுபற்றி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கவனத் துக்கு கொண்டு சென்றேன். அமைச் சர் உடனடியாக தனது உதவியா ளரிடம் ரூ.5 லட்சத்தை கொடுத்து அனுப்பினார். ஹோட்டல் கட்டணம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்து 898 செலுத்தப்பட்டது. மீதமுள்ள பணத்தை அமைச்சரின் உதவி யாளர் கொண்டு சென்றுவிட்டார்.

ஜெயலலிதாவிடம் ரேகை பதிவு செய்ததற்காக, நான் ரூ.5 லட்சம் வாங்கியதாக தேவையில்லாமல் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதில் எந்த உண்மையும் இல்லை.

இவ்வாறு டாக்டர் பாலாஜி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x