Last Updated : 15 Mar, 2017 09:21 AM

 

Published : 15 Mar 2017 09:21 AM
Last Updated : 15 Mar 2017 09:21 AM

மீண்டும் அத்துமீறும் டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள்: விளம்பர அழைப்பு, எஸ்எம்எஸ் தொந்தரவு அதிகரிப்பு- ஆபாச குறுஞ்செய்திகளுக்கு தனி ‘சர்வர்’

செல்போன் வாடிக்கையாளர் களுக்கு தேவையற்ற விளம்பர அழைப்புகள், குறுஞ்செய்திகளை அனுப்பி டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் மீண்டும் தொல்லை கொடுக்க ஆரம்பித்திருக்கின்றன.

வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசியப் பொருளாகிவிட் டது செல்போன். இதை விளம்பர நிறுவனங்கள் தங்களுக்கு சாதக மாகப் பயன்படுத்தி, செல்போன் அழைப்புகள், எஸ்எம்எஸ் மூலம் அனைவருக்கும் தொல்லை கொடுக்கின்றன. செல்போன்கள் மூலம் விளம்பரங்கள் செய்ய ஏராளமான ‘டெலி மார்க்கெட்டிங்’ நிறுவனங்கள் உள்ளன. நமக்கு ‘சிம் கார்டு’ கொடுக்கும் செல்போன் சேவை நிறுவனங்களிடம் இருந்து செல்போன் எண்களை பெற்றுக் கொள்ளும் டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள்தான் இதுபோல தேவையற்ற அழைப்புகள், எஸ்எம்எஸ்களை அனுப்பி தொல்லை கொடுக்கின்றன.

இந்த நிறுவனங்களைக் கட்டுப் படுத்தும் அதிகாரம், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு (ட்ராய்) உள்ளது. தேவையற்ற அழைப்புகள், குறுஞ் செய்திகளை கட்டுப்படுத்தும் வகை யில், ‘தேவையற்ற அழைப்புகளின் பதிவு’ என்ற புதிய திட்டம் உருவாக் கப்பட்டது. இதன்பிறகு, சில மாதங்கள் கட்டுப்பாட்டில் இருந்த டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் இப்போது மீண்டும் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளன.

அழைப்புகளை தடுப்பது எப்படி?

தேவையற்ற அழைப்புகளை தடுப்பது குறித்து மத்திய தொலைத் தொடர்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:

தேவையற்ற அழைப்புகளை விரும்பாத நுகர்வோர் ‘1909’ என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். அல்லது www.nccptrai.gov.in என்ற இணையதளத்தில் சென்று தங்கள் செல்போன் எண்ணை பதிய வேண்டும். இதையடுத்து, விளம்பர அழைப்புகள், எஸ்எம்எஸ்கள் நிறுத் தப்படும். பதிவு செய்த ஒரு வாரத் துக்குப் பிறகும் இவை வந்தால், செல்போன் சேவை வழங்கும் நிறு வனத்திடம் புகார் கொடுக்கலாம்.

விளம்பர அழைப்பு வந்த நேரம், தேதி ஆகியவற்றை ‘1503’ என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம். இதுதொடர்பாக ஆன்லைனிலும் புகார் கொடுக்கலாம். இவ்வாறு பதிவு செய்தவர்களுக்கு மீண்டும் விளம்பர அழைப்புகள் வந்தால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.2.5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. ஆனால் இதுவரை ஒரு நிறுவனத்துக்குகூட இந்த அபராதம் விதிக்கப்படவில்லை.

ஆபாச எஸ்எம்எஸ்

சைபர் கிரைம் விசாரணை அதிகாரிகள் கூறியதாவது:

‘இலவச எஸ்எம்எஸ் மூலம் நட்பு மற்றும் டேட்டிங் செல்ல ஆட்களை அனுப்புகிறோம்’ என்று தினமும் லட்சக்கணக்கான நபர்களுக்கு ஏராளமான எஸ்எம்எஸ்கள் அனுப் பப்படுகின்றன. இதுகுறித்து எங்க ளுக்கு புகார்கள் வந்ததும் அது குறித்து விசாரணை நடத்த தனிக் குழு அமைத்தோம். எஸ்எம்எஸ் அனுப்பப்பட்ட எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், சில வெளி நாட்டு சாதனங்களின் உதவியோடு தற்காலிக சர்வர்களை கொண்டு ஆபாச எஸ்எம்எஸ்களை அனுப்பு வது கண்டுபிடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக செல்போன் சேவை நிறுவனங்களுக்கு எச்சரிக்கப்பட் டுள்ளது. அவர்களும் தீவிரமாக கண் காணிப்பதாக தெரிவித்துள்ளனர்.

விரைவில் பிடிபடுவார்கள்

ஏ, பி, சி, டி என ஆங்கில எழுத்தில் தொடங்குபவை வங்கி, விமான டிக் கெட் தொடர்பான எஸ்எம்எஸ்கள். டெலி மார்க்கெட்டிங் நிறுவனங் களின் விளம்பர எஸ்எம்எஸ்கள் 1, 2, 3 என எண்களில் தொடங்கும். ஆனால், தனியார் சர்வர்கள் மூலம் அனுப்பப்படும் ஆபாச எஸ்எம்எஸ்கள் ஆங்கில எழுத்து மற்றும் எண்கள் என இரண்டையும் கொண்டுள்ளது. ஆபாச எஸ்எம்எஸ்ஸில், தொடர்புக்கான செல்போன் எண் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், வாடிக்கையாளர் போல பேசி, சிலரைப் பிடித்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் முக்கிய குற்றவாளிகள் பிடிபடுவார்கள்.

முகர்ஜியை கோபப்படுத்திய செல்போன் அழைப்பு

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 2010-ல் மத்திய நிதியமைச்சராக இருந்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லியுடன் முக்கியமான விவாதத்தில் இருந்தபோது, அவரது செல்போன் ஒலித்தது. அதை எடுத்துப் பேசிய பிரணாப்பின் முகம் திடீரென மாறியது. ‘நோ, நோ. எதுவும் வேண்டாம். முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறேன்’ என்று கோபத்துடன் கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.

‘வீடு கட்ட லோன் வேண்டுமா?’ என்று பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து வந்த டெலி மார்க்கெட்டிங் அழைப்பு என்று பின்னர் தெரியவந்தது. தங்களுக்கும் இதுபோன்ற அநாவசிய அழைப்புகள், எஸ்எம்எஸ்கள் வந்து தொல்லை கொடுப்பதாக வெங்கைய நாயுடு உள்ளிட்டோரும் கூறினர். இது உடனடியாக தொலைத்தொடர்பு துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, இதுபோன்ற ‘அத்துமீறல்’ அழைப்புகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x