Last Updated : 03 Jan, 2014 12:00 AM

 

Published : 03 Jan 2014 12:00 AM
Last Updated : 03 Jan 2014 12:00 AM

ரயிலில் பாதுகாப்பு குறித்து பெண்கள் புகார் தெரிவிக்க தனி மின்னஞ்சல் முகவரி

ரயில் நிலையங்களிலும், ஓடும் ரயிலிலும் பயணிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் புகார் தெரிவிக்க பிரத்யேக இணையதளத்தைத் தொடங்கியுள்ளது ரயில்வே பாதுகாப்புப் படை.

அத்துடன் முக்கியமான 20 ரயில் நிலையங்களில் புகார் மற்றும் ஆலோசனைப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

சென்னை கடற்கரை - தாம்பரம், சென்னை கடற்கரை - வேளச்சேரி, சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் - அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி மார்க்கங்களில் இரவு நேரத்தில் 96 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. அப்போது போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் பெண்களை கேலி செய்வது, செயின் பறிப்பு போன்ற அசம்பாவிதங்கள் நடப்பதாக புகார் எழுந்தது.

இரவுநேர மின்சார ரயில்களில்

இதையடுத்து இரவுநேர மின்சார ரயில்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை, சென்ட்ரல், மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ், எழும்பூர், மேற்கு மாம்பலம், தாம்பரம், பரங்கிமலை, திருவள் ளூர், அரக்கோணம், கும்மிடிப் பூண்டி, எண்ணூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் புகார் மற்றும் ஆலோசனைப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

பயணிகளுக்கு குறிப்பாக பெண் களுக்கு ஏதாவது அசெளகரியம் ஏற்பட்டால் புகார் தெரிவிக்க rpfsakthipadai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை ரயில்வே பாதுகாப்புப் படை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரி விளக்கம்

இதுகுறித்து முதுநிலை கோட்ட ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் எஸ்.ஆர்.காந்தி கூறியதாவது:

பயணிகள் குறிப்பாக பெண் பயணிகளின் குறைகளைப் போக்க முக்கியமான 20 ரயில் நிலையங்களில் ஆலோசனைப் பெட்டிகளை வைத்துள்ளோம். அது போல தனி மின்னஞ்சல் முக வரியை ஏற்படுத்தியுள்ளோம்.

புறநகர் மின்சார ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்யும்போது திருநங்கைகள் தொந்தரவு, பாலியல் துன்புறுத் தல், கேலி, கிண்டல் போன்ற பாதுகாப்பு தொடர்பான புகார்கள் மட்டுமல்லாமல் ரயில் பெட்டி களை சுத்தம் செய்யாததால் குப்பைகள் அதிகமாக இருப்பது, மின்விசிறிகள் ஓடாமலும், மின்விளக்குகள் எரியாமலும் இருப்பது குறித்து புகார் கொடுக்கலாம்.

புகார் மற்றும் ஆலோசனைப் பெட்டிகளை சம்பந்தப்பட்ட ரயில்வே பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் தினமும் திறந்து பார்த்து அதிலுள்ள மனுக்களை எங்கள் அலுவலகத்துக்கு அனுப்பு வார். பாதுகாப்பு தொடர்பான புகார் என்றால், விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிடப்படும்.

ரயில்வேயின் மற்ற துறை கள் தொடர்பான புகாராக இருந் தால், உரிய துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப் படும். நடவடிக்கை எடுத்த பிறகு அதுபற்றி புகார்தாரருக்கும் தெரி விக்கப்படும்.

பயணிகள் தங்கள் குறை களை ஹெல்ப் லைன்களிலும் (90031 61710, 044-25353999) தெரிவிக்கலாம் என்று முதுநிலை கோட்ட ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x