Published : 01 May 2017 10:04 AM
Last Updated : 01 May 2017 10:04 AM

மணல் குவாரிகளை மூடுவதற்கு எதிர்ப்பு

நீதிமன்ற உத்தரவை அரசு மீறுவதாகவும் மணல் குவாரி கள் மூடப்பட்டதால் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள தாகவும் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் பகுதியில் மணல் லாரி உரிமை யாளர்கள் சங்கம் சார்பில் புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம் தலைவர் யுவ ராஜ் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து மணல் லாரி உரிமை யாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் நிருபர்களிடம் யுவராஜ் கூறிய தாவது:

தமிழகத்தில் 9 மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன. இதற்கு மணல் லாரி உரிமை யாளர்கள் சங்கம் கடும் கண் டனத்தை தெரிவிக்கிறது. நீதி மன்றம் 7 மணல் குவாரிகளை மட்டுமே மூட உத்தரவிட்டிருந்த நிலையில் தமிழக அரசு, நீதி மன்றம் தெரிவிக்காத பல மணல் குவாரிகளையும் மூடி வருகிறது.

தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் செவ்வாய்க்கிழமை முதல் வரை நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். அதன் பிறகு நாமக்கல் மாவட்டத்தில் பொதுக்குழு கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரி விப்போம்.

தற்போது மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளதால் 55 ஆயிரம் லாரிகள் வேலை இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 1 லட்சம் பேர் வேலை இழந்து தவித்து வரு கின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x