Published : 08 Aug 2016 06:55 PM
Last Updated : 08 Aug 2016 06:55 PM

தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும்

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம், ''கேரள மாநிலம் மற்றும் கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதன் பாதிப்பால் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரளவுக்கு மழை இருக்கும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒருசில இடங்களில் பெய்யக்கூடும்.

வெப்பநிலையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 98.6 டிகிரி ஃபாரன்ஹீட், குறைந்தபட்சமாக 82.4 டிகிரி ஃபாரன்ஹீட் இருக்கும்'' என்று தெரிவித்துள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x